பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. sumugyum 9I&lugylli = 547 அதைத் தொடக்கத்திலேயே செய்திருக்க வேண்டும். இத்தனையும் நடந்த பின்னர் இனி விடுவது என்பது சரியுமல்ல, சாத்தியமுமல்ல என்று கூறுகிறான். இராவணனுடைய சொற்களில் பழைய வேகம் இல்லை. ஆயினும் பிடிவாதம் குறையாமல் முன் வைத்த காலைப் பின் வாங்க முடியாது என்னும் தனியாண்மை நிலையில் மானப் பிரச்னை அல்லது கவுரவப் பிரச்னையாகவே போரைத் தொடருகிறான் என்பதைக் கம்பன் பாடல் மிக்க நயமாக எடுத்துக் காட்டுகிறது. “மூதுணர்ந்த இம்முது மகன் கூறிய முயற்சி சீதை என்பவள் தனை விட்டு அம்மனிதரைச் சேர்தல் ஆதியின் தலை செயத்தக்கது, இனிச் செயல் அழிவால் காதல் இந்திர சித்தைமாய் வித்தல் கண்டும்” என்றும், “விட்டம் ஆயினும் மாதினை வெம் சமம் விரும்பிப் பட்ட வீரரைப் பெருகிலம், பெறுவது, பழியால் முட்டி மற்றவர் குலத்தொடும் முடிக்குவது அல்லால் கட்டம் அத்தொழில் செருத்தொழில் இனிச் செயம் கடமை” என்றும் இராவணன் கூறுகிறான். இவ்வாறு கூறி இராவணன் இறுதிப் போருக்கு தயாராகிறான். தனது சக்திமிக்க மூலபலப்படையைத் திரட்டுகிறான். இது இராவணனுடைய போர்த் தந்திரத்தின் முற்றிய கட்டமாகும். மூலபலப் படையைப் பற்றி அதன் சக்தி, போர்க்குணம், இயல்பைப் பற்றிக் கம்பன், கீழ்க்கண்டவாறு கூறுகிறார். "அறத்தைத்தின்று, அருங்கருணையைப் பருகி வேறு அமைந்த மறத்தைப் பூண்டு வெம்பாவத்தை மணம் புணர் மணாளர் நிறத்துக்கார் அன்ன நெஞ்சினர் நெருப்புக்கு நெருப்பாய்ப்