பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 557 விழுந்திலன் அன்றோ மற்று அவ் வீடணன் என்ன, விம்மித் தொழும் துணை அவனை நோக்கித் துணுக்கமும் துயரும் நீங்கிக் கொழுந்தியும் மீண்டாள், பட்டான் வரக்கன் என்று உவகை கொண்டான்” “தருமம் என்று அறிஞர் சொல்லும் தனிப்பொருள் தன்னை இன்னே கருமம் என்ற அனுமன் ஆக்கிக் காட்டிய தன்மை கண்டால் அருமை என் இராமற்கு அம்மா? அறம் வெல்லும் பாவம் தோற்கும் இருமையும் நோக்கின் என்னா? இராமன் பால் எழுந்து சென்றார்.” மறுபக்கம் இராவணன் இலக்குவனை வீழ்த்தி விட்டோம் என்னும் களிப்பில் வேண்டிவர்களை அழைத்து விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அனைவரும் குடித்துக் களித்தனர். நாட்டிய நங்கையர் ஆடிய ஆட்டங்களையும், பாடிய பாட்டுக்களையும் கண்டும் கேட்டும் மகிழ்ந்திருந்தனர். களித்திருந்தனர். அந்த நேரத்தில் ஒற்றர்கள் வந்து இலக்குவன் உயிர் பெற்று எழுந்ததைப் பற்றிக் கூறுகின்றனர். இராவணன் முதலில் அதை நம்பவில்லை. முதியவன் மாலியவான் திரும்பவும் இராவணனிடம் இராமன் தெய்வத்தன்மை கொண்டவன், பாற்கடலில் பள்ளி கொண்டிருந்தவன். மனிதனாகப் பிறந்து இங்கே வந்துள்ளான் என்று வீடணன் கூறியதை இங்கு மீண்டும் நினைவு படுத்துகிறான். மாலியவான் கூறியதை இராவணன் சட்டை செய்யவில்லை. ஆயினும் இதுவரை நடந்து முடிந்துள்ள போர் நிகழ்ச்சிகளையெல்லாம் நினைவு கூர்ந்து, எண்ணிப் பார்க்கிறான். அரக்கர் படை தொடர்ச்சியாக அழிந்து பட்ட காட்சி அவனுடைய கண்களுக்குப் புலப்படுகிறது. இருப்பினும் இராவணன் இன்னும் ஆத்திரம் அதிகம் கொண்டு மீண்டும் போருக்குத் தயாராவதைக் கம்பன் குறிப்பிடுகிறார்.