பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133

நுனி கொண்டு மிதித்ததும் கையில் வாங்கியதும் நாண் ஏற்றியதும் கண்டிலர். ஏன் ? அவ்வளவு விரைவில் எல்லாம் நடந்தன. வில்லைக் கையில் ஏந்தியது ஒன்றே கண்டார். அடுத்த நொடியில் ‘படார்’ என்ற சப்தம் கேட்டனர். வில் ஒடிந்தது.

xxxx

இமையாமல் தடுத்து - கண் இமைக்காமல் தடுத்து; இருந்தவர்-விழித்த கண் விழித்தபடியே பார்த்துக் கொண்டு இருந்தவர் (சபையோர்) தாளில் மடுத்ததும்--இராமன் தன் கால் கட்டை விரலால் மிதித்து எழச் செய்ததும்; நாண் நுதி வைத்ததும் - நாணேற்றியதையும்; கடுப்பினில் - அச்செயல்கள் விரைவாக நடந்ததினால், நோக்கார்- காணார்; அறிந்திலர்-அறியவும் இலர்; கையால் எடுத்தது கண்டார்; கைகளால் எடுத்தது ஒன்றே கண்டார்; இற்றது கேட்டார் - ஒடிந்த சப்தம் கேட்டனர்.

xxxx

இராமன் அந்த சிவ தனுசை நாணேற்றி விட்டான். வில் முறிந்தது என்ற செய்தி கேட்டு மிதிலை வாழ் மக்கள் மட்டிலா மகிழ்ச்சியில் மூழ்கினார்கள். சீதா கல்யாணமும் உறுதி ஆயிற்று.

xxxx


யரதன் புதல்வன் என்பார்
        தாமரைக் கண்ணண் என்பார்
புயல் அவன் மேனி என்பார்
        பூவையும் பொருவும் என்பார்
மயல் உடைத்து உலகம் என்பார்
        மானுடன் அல்லன் என்பார்
கயல் பொரு கடலுள் வைகும்
        கடவுளே காணும் என்பார்