பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139

சமயத்திலும்‌ ஒவ்வொரு கூறாகப்‌ பார்த்தவர்‌ அதுவே முற்ற முடிந்த ஒன்று என்று வாதிப்பது போல்‌ இருந்தது.

𝑥𝑥𝑥𝑥

தோள்‌ கண்டார்‌—இராமனது தோள்‌ அழகு சுண்டவர்கள்‌; தோளே கண்டார்‌— அதன்‌ அழகில்‌ ஈடுபட்டவர்களாய்‌ அதையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்‌; தொடுகழல்‌—வீரக்‌ கழல்‌ அணிந்த; கமலம்‌ அன்ன—தாமரை மலரை ஒத்த; தாள்‌ கண்டார்‌—திருவடிகளைக்‌ கண்டவர்கள்‌; தாளே கண்டார்‌—அத்‌திருவடிகளையே பார்த்து நின்றார்கள்‌; தடக்கை கண்டாரும்‌—பெரிய திருக்கரங்களின்‌ அழகைக்‌ கண்டவரும்‌; அஃதே—அவ்வாறே; வாள்‌ கொண்ட கண்ணார்‌—வாளினை ஒத்த கூறிய கண்‌ கொண்ட மகளிர்‌; எவரே—எவர்தான்‌; வடிவினை முடியக்‌ கண்டார்‌ —இராமபிரானின்‌ திருமேனி முழுவதும்‌ கண்டார்‌? (அங்ஙனம்‌ அப்‌பெருமானின்‌ திருவுருவம்‌ முழுவதும்‌ காணாமல்‌ ஒவ்வொரு பகுதியை மட்டும்‌ கண்டவர்‌) ஊழ்‌ கண்ட சமயத்து—பல்‌வேறு வகையான சமயங்களில்‌; அன்னான்‌ உருவு கண்டாரை—இறைவனின்‌ ஒரு பகுதியை மட்டும்‌ பார்த்துவிட்டு இதுவே முற்ற முடிந்த உரு என்று வாதிடுவோரை ஒத்தார்‌—ஒப்ப இருந்தனர்‌.

𝑥𝑥𝑥𝑥


தோரண நடுவாரும்‌
        தூணுறை இடுவாரும்‌
பூரண குடம்‌ எங்கும்‌
        புனை துகில்‌ புனைவாரும்‌
காரணி நெடு மாடம்‌
        கதிர்‌ மணி அணிவாரும்‌
ஆரண மறை வாணர்க்கு
        அமுது இனிது அடுவாரும்‌.