பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

கமையினாள் திருமுகத்து அயல்
        கதுப்புறக் கதுவிச்
சுமையுடைக் கற்றை
        நிலத்திடைக் கிடந்த தூமதியை
அமைய வாயில் பெய்து உமிழ்கின்ற
        அயில் எயிற்று அரவில்
குமையுறத் திரண்டு ஒரு
        சடையாகிய குழலாள்.

கூந்தலுக்கு எண்ணெய் தடவிச் சீவி முடிந்தாள் அல்லள். ஆகையினாலே அவளுடைய கரிய கூந்தல் சடையாகிக் கன்னம் வழியாகத் தரையில் புரண்டு கொண்டிருக்கிறது. அது எப்படியிருக்கிறது? அவளுடைய முகமாகிய சந்திரனை கூந்தலாகிய இராகு எனும் பாம்பு விழுங்கி உமிழ்வது போல் இருக்கிறது!

சீதையின் முகம் சந்திரனுக்கு உவமை; கூந்தலின் தலைப்பகுதி, இராகுவாகிய பாம்பின் தலைக்கு உவமை; சடைப் பகுதி, பாம்பின் உடலுக்கு உவமை.

***

கமையினாள் - பொறுமையுடைய சீதையின்; திருமுகத்து - அழகிய முகத்திற்கு; அயல் - பக்கங்களில் உள்ள; கதுப்பு உற - கன்னங்களில் பொருந்த; கதுவி - பற்றிக்கொண்டு; சுமை உடை - பாரம் உடைய; கற்றை - கூந்தல்; நிலத்து இடை - பூமியினிடையே; கிடந்த தூமதியை - களங்கமற்ற தூய சந்திரனை; அமைய - பொருந்த; வாயில் பெய்து உமிழ்கின்ற - வாயில் இட்டு மீண்டும் வெளியே உமிழ்கின்ற; அயில் எயிற்று அரவில் - கூரிய பற்கள் கொண்ட ராகு என்னும் கிரகமாகிய பாம்பு போல; குமை உற திரண்டு -