பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

புதல்வனாகிய) நீ அவன் தூதன் ஆதல்- நீ [உன் தந்தையைக் கொன்ற அவன் தூதன் ஆதலாகிய, நிந்தனை - பழிப்பு; இதன் மேல் உண்டோ - இதற்குமேல் வேறு ஏதாவது உண்டோ? (ஆகையால் தூது வந்ததை விடு) நினக்கு - உனக்கு; வானரத் தலைமை - வானர அரசு; யானே தந்தனன் - நானே கொடுத்துவிட்டேன்; என்னுடைமைந்த . எனது மகனே! தாழாவந்தனை - காலந்தாழ்த்தாது வந்தாய்; நன்று செய்தாய் - நல்ல காரியம் செய்தாய்.

***

தாதையைக் கொன்றான் பின்னே
        தலை சுமந்து இருகை நாற்றிப்
பேதையன் என்ன வாழ்ந்தாய்
        என்ப தோர் பிழையும் தீர்ந்தாய்
சீதையைப் பெற்றேன் உன்னைச்
        சிறுவனுமாகப் பெற்றால்
ஏதெனக்கு அரிது என்றான்
        இறுதியின் எல்லை கண்டான்.

"தந்தையைக் கொன்றவன் பின் இருகைகளையும் தலைமேல் கூப்பிக் கொண்டு வாழ்ந்தான் அறிவிலி]. என்கிற பழிச் சொல்லும் அகலப் பெற்றாய். சீதையைப் பெற்றேன்- உன்னைச் சிறுவனுமாகப் பெற்றால் இந்த உலகிலே எனக்குக் கிடைத்தற்கு அரிய பொருள் வேறு என்ன இருக்கிறது?’ என்றான் வாழ்நாளின் இறுதிக் காலத்தை எட்டிவிட்ட இராவணன்.

***

இறுதியின் எல்லை கண்டான் - முடிவு காலத்தின் எல்லையினை விரைவிலே அடைந்து கொண்டு இருக்கும் இராவணன் (பின்னும் அங்கதனைப் பார்த்துச் சொன்னான்) தாதையைக் கொன்றான் பின்னே - தந்தையைக்