பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340

நீங்கப் பெற்றாலும்; நன்று - (அதுவும்) நல்லதே; என - என்று நினைந்து; ஏக்கம் நீங்கினாள் - துயரம் ஒழியப் பெற்றாள்.

***

(ஆளுடை நம்பி, ‘ஆரூரானை மறக்கலுமாமே’ என்று கூறினார். அன்னை பத்து மாதங்கள் பிறன் மனைகளில் இருந்து பேராரவாரத்துடன் வெற்றி வீரன் இராமனைக் கண்ட பின்னர் அவனை மறக்கமுடியாது என்பது திண்ணம். அத்துடன் அன்றி உலகத்தில் சிருட்டிக்கப்பட்ட அனைத்திற்கும், வாழ்வளிப்பன் பரமனே. இறுதியில் இரட்டைகள் ஆனபிறப்பு இறப்பினின்று விடுவிப்பவனும், அவனே. எனவே பெத்த நிலையும் முத்தி நிலையிலும் உற்ற துணைவனான அவன் பிறப்பினும், துறப்பினும் துணைவன் என்றார் கவியரசர்.

தொழுத அன்னையை நோக்கினான் அண்ணல்.

***

கற்பினுக் கரசியைப் பெண்மைக்
        காப்பினைப்
பொற்பினுக்கு அழகினைப் புகழின்
        வாழ்க்கையைத்
தன் பிரிந்து அருள் புரி தருமம்
        போலியை
அன்பின் அத்தலைவனும் அமைய
        நோக்கினான்

முன்பு இதே அண்ணல் அவளை நோக்கினான். அதைக் கம்பன், “அண்ணலும் நோக்கினாள்; அவளும் நோக்கினாள்” என்றான். ஆனால் இப்போது தொழுது நின்ற இனிய துணைவி சீதையைக் காண்கிறான் இராமன். எத்தகைய