பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


அங்கதனுக்கு லட்சுமணன் வருகையை வானரங்கள் தெரிவித்தன. சிற்றின்பத்தில் மூழ்கியிருந்தான் சுக்ரீவன். அங்கதன் அவனுக்கு எவ்வளவோ சொல்லியும் பயனில்லை. குரங்குகள் லட்சுமணனை முன்னேறாமல் தடை செய்தன. கோபாவேசமாக குரங்குகளை சிதறியடித்தான் லட்சுமணன். அவன் கோபத்தை அடக்க ஒரு யோசனை கூறுகிறான் அநுமன். அதன்படி தாரை பெண்கள் சூழ வருகிறாள்.

***


வில்லும் வாளு மணி
        தொறு மின்னிட
மெல் அரி குரல் மேகலை
        ஆர்த்து எழ
பல்வகைப் புருவக்கொடு
        பம்பி
வல்லி ஆயம் வலத்தினின்
        வந்ததே.

மகளிர் குழாம் சூழவந்து லட்சுமணனை வழி மறித்தாள் தாரை, அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு. சிலம்புகள் பறைபோல ஒலித்தன. அணிகலன்களின் ஒளி ‘பளபள’ என வேல், வாள் போல மின்ன, இளைய பெருமாளை தடுத்தாளாம் தாரை.

***

வல்லி ஆயம் - (தாரை சூழ வந்த) மகளிர் கூட்டமாகிய சேனை ;அணிதொறும் - அணிந்துள்ள ஆபரணங்கள் தோறும்; வில்லும் வாளும் மின்னிட விளங்கவும்; மெல் அரி குரல் - மெல்லிய சிறிய பருக்கைக் கற்களையுடைய காற்சிலம்புகளின் ஒலியும்; மேகலை - மேகலை என்னும் இடையணி ஒலியும்; ஆர்த்து எழ - பறையொலியாக எழ; பல்வகை புருவம் கொடி - பல வகையான புருவங்களாகிய