பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - கம்பர் கடிமணம் காணப் புறப்பட்ட மகளிரில் இருவர்தம் வழிச் செயல்களை இப்பாடல்கள் கூறுகின்றன. அன்னத்தைக் கண்ட ஒருத்தி அதனைத் தோழி எனவும் துணை எனவும் கருதினாளாம்; தன் தோழி ஆடையின்றியிருந்தால் இகழ்ச்சியாகுமே என்று எண்ணி உடுத்திக்கொள் என்று அன்னக் கன்னிக்குத் தான் கொண்டு வந்த ஆடையை அளித்தாளாம். இஃது ஒரு காட்சி. இன்னொருத்தி தோழியோடு உடன் வந்தாள்; சோலைக்குள்ளே ஒளிந்துகொண்டு என்னைக் கண்டுபிடி என்று கண்ணாம் பூச்சி விளையாடினாள். தோழி காணமாட்டாதபோது பின்னே வந்து அவள் கண்ணைப் பொத்திக் கேலி செய்தாள். இஃது ஒரு காட்சி. இங்ங்னம் முந்நூறு செய்யுட்கள் கொண்ட இப்படலங்களில் ஆடவர் மகளிரின் ஆர்வச் செயல்கள், தயரத குடும்பத்தாரின் பெரும் புறப்பாடு, படைகளின் செலவு, சோலைக்காட்சி, மலைக்காட்சி, விளையாட்டுக் காட்சி எல்லாம் இரத்தினக் கம்பளம் விரித்தாற்போலக் காட்டப்படுகின்றன. இத்திருமணப் புறப்பாட்டை இவ்வளவு இன்ப எழுச்சியாகப் பாடாவிட்டால், எல்லாக் குலத்தாரும் திரண்டு கூடி ஆடிப்பாடி ஆசையோடு புறப்பட்டனர் என்று பாடாவிட்டால், அயோத்தியின் துன்பக்களம் தொடர்புடைய களம் ஆகுமா? மன்னன் வனம் புகுவான் என்ற மாற்றத்தைக் கேட்டு, எல்லாருமே உடன் போவோம் என்ற அவல எழுச்சியைத் தோற்றுவிக்க முடியுமா? அவலக் காண்ட்ம் எனத்தகும் அயோத்தியா காண்டத்துக்கு ஏற்ற இன்பக் காண்டம் பாலகாண்டம் என்று கொள்ளுங்கள். w & காப்பியப் பாட்டுக்கள் இடைக்காலப் புலவர் ஒருவர் கூறினாராம், இராமாயணப் போர் அடித்தேன்; 2000 தான் நெல், 8000 பதர் என்று. இக்கருத்துத்தான் , இராமாயண்ம் கற்பவர் பலருக்கு இன்று ஊறிக்கிடக்கின்றது. கதைத் தொடர்பான பாட்டுக்கள் தாம் இராமாயணமாக அவர்களுக்குப் படுகின்றன. ஏன்? புரிதற்கும் சொல்வதற்கும் எளிமையாக இருக்கின்றன. பேச்சுப் பாட்டுக்கள்தாம் இராமாயணத்தில் பலருக்குப் பிடித்த பாட்டுக்கள். மன்னவன் பன்னியன் றாகின் நும்பணி மறுப்பனோவென் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ என்னினி உறுதி யப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன்