பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கம்பர் பாடுவதற்கு விரிந்த கதை பெற்றவர். அக்கதையை உலகத்தின் நாற்றிசையோடு தொடர்பு படுத்தி விரிந்த காப்பியம் செய்தவர். ஆதலால் காப்பியம் ஆவதற்கு எப்படலங்களை அமைத்தாரோ, எத்துணை ஆயிரம் பாடல்களைப் பாடினாரோ அவற்றை முதன்மையாகப் பார்ப்பது தான் காப்பியப்பார்வை. பாத்திரங்களை மாத்திரம் பார்த்துக் கொண்டிராது, அவற்றின் பேச்சுக்களை மாத்திரம் படித்துக் கொண்டிராது, இப்பாத்திரங்களுக்கு உலக வரங்கம் எவ்வண்ணம் தொடுக்கின்றார், மரஞ்செடி கொடி பறவை விலங்கு மலை நிலம் கடல் முதலானவற்றை எவ்வாறு கதைக்குப் பக்குவப் படுத்துகின்றார் என்று காண்பது காப்பியப் பார்வை, கதை என்பதுஅரிசி போல்வது; காப்பியம் என்பது சமையல் போல்வது. இவ்வேறு பாட்டை யுணர்ந்து வரும்காலம் கம்பர்தம் காப்பியத்தை முழுமையாகக் கற்குமாக, கற்பிக்குமாக, பரப்புமாக, எழுதுமாக.