பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

வர்ணனைகளில் ஒரு பாகத்தை வெட்டியும் காவியத்தைச் சுருக்கி, கதையை ஒரே தொடர்ச்சியாக வரும்படி செய்வது. ஆனால் பாடற்றிரட்டுகளை மனிதர் பொழுது போக்காகப் படிக்கிறது தான் வழக்கமாக இருக்கிறதே ஒழிய, சிரத்தையோடும் கவனத்தோடும் படிக்கிறது வழக்கமில்லை, தவிர பாட்டுகளின் பொருட்செறிவு அனைத்தும் அந்தந்த கட்டங்களில் தான் தெரியுமே யல்லது முன்பின் பாட்டுகளின் சம்பந்தத்தை விட்டுத் தனியாக நிற்கும்போது தெரியாது. ஆனதால் உபாக்கியானங்களில் பலவற்றையும், வர்ணனைப் பெருக்கங்களில் பெரும் பாகங்களையும் வெட்டிவிட்டு, கம்பனுடைய வாக்கிலேயே கதை தொடர்ச்சியாக வரும்படி எழுதி அச்சிட்டால்தான் கற்போருக்கு மேற்சொல்லிய இரண்டு இடையூறுகளும் நிவர்த்தியாகும் என்கிற எண்ணம் தோன்றியது. அந்த எண்ணத்திற்கேற்ப,


பட்டு, அந்த லோகோபகாரத்தை நிலை கெடுக்கிற இளங் கல்விமான்கள் பல பெயர்கள் இருக்கிறார்கள். அவர்களை சந்திப் பேய் அறையாமலும், விகாரவெறி பிடியாமலும், அவர்களுக்கு தெளிவு உண்டாகி, கலகம் தீரும்படியாய், இந்த சந்தியையும் விகாரத்தையும் குறித்து, சந்தி விளக்கம் என்று ஒரு நூல் செய்யவேணும் என்றும்கூடக் கேட்டுக்கொண்டார்கள்.

அவர்களாலே கேட்டுக்கொள்ளப்பட்ட இந்த இரண்டும் லோகோபகாரமா இருக்கையால், யாமும் அதுகளுக்கு உடன் பட்டோம். அதற்காக, கற்றவர்களுக்கே செம்பாதிபொருள் விளங்காது என்று லோகவதந்தி ஆகியிருக்கிற, இந்த ஸ்ரீமத் கம்பராமாயணத்திலே, மேற்படி சத்தியையும் விகாரத்தையும் தகுந்தபடி. பிரிவினை செய்தால், அது முழுதுப் பொருள் விளங்கும் என்று எண்ணி, முதலிலே அயோத்தியா காண்டத்தில் அறுபதாம் பக்கம் தொடங்கி, தேர்ந்த ஒரு நல்ல கல்விமான் ஆனவர் ஒருவரிடத்தில் தாம் கற்ற போதும், தாமே கற்கிறபோதும், தாம் ஒருவனுக்குக்