பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

கற்பனைச்சித்திரம்



சிவாயம் ஏசலானான். "இப்படிப்பட்ட தவறுகள் நடைபெறுவதை, அனுமதிக்கிறோம், ஆசீர்வாதம் செய்கிறோம், அவர் இஷ்டம் என்று கூறுகிறோம். அதனதன் விதிஎன்று கூறுகிறோம். இரண்டு பேருடைய வாழ்க்கையை அந்த ஒரு ஆசாமி தன் இஷ்டத்துக்கு ஏற்றபடி வளைத்து விட்டான். அதைத் திருத்தவும் முடியாது, கண்டிப்பதும் கூடாது. பாவம்! அந்தக் கம்பாசிட்டர், என்னமோ கை தவறித் தப்பாக அச்சுக் கோர்த்துவிட்டான், அவனை நான் மடையன், குருடன் என்றெல்லாம் திட்டினேன். விஷயத்தைப் பார்க்கப்போனா அவன் கைக்குத் தங்கத் தோடா அல்லவா போடணும் போல இருக்கு" என்று கூறினான். நமசிவாயம், எனக்கு ஆனந்தம்! அவன் தங்கத் தோடா கூடப் போடத்தேவையில்லை, அவன் சொன்ன வார்த்தை, வைரத் தோடா போலே இருந்தது, என் மனது குளிர்ந்தது. பிறகு வேறு ஏதோ தேவாரம் திருவாசகம் முதலிய சத் விஷயங்களைப் பேசிவிட்டு, நமசிவாயம் விடை பெற்றுக்கொண்டு போனான். எனக்கு, இனியாவது எழுந்திருந்து போய்ச் சாமி காலிலே விழுந்து கும்பிடுவோமா என்ற எண்ணம் உண்டாயிற்று. ஆனால் ஒரு பயம் இருந்தது. நான் செய்த எல்லாத் தவறுகளுக்கும் சாமியாரே சமாதானம் சொல்லிவிட்டார், ஆனால் நானோ சாமியாரையே, காமி சாவடியானந்தர் என்றல்லவா......

காமி சாவடியானந்தருக்கு தூக்கம் வரவில்லை படுத்துக் கொண்டே பாடிக்கொண்டிருந்தார். பனிரண்டு மணி சுமாருக்கு, யாரோ வரும் சத்தம்!

"ஏது பாட்டு, பலே ஜோரா இருக்குதே" என்று ஓரு குரல்கேட்டது திடுக்கிட்டுப் போனேன் பெண் குரல்! பேசியது பச்சை! எனக்குத்தெரிந்தவள்!! பலசரக்குக் கடையைக் கூட்டி மொழுகிச் சுத்தம் செய்பவள் அவள் வருகிறாள் சாவடிக்கு நடுநிசியில்! காமி சாவடியானந்தனே தான் இவன் ! இதிலேகூட நான் அச்சடித்ததிலே என்ன தவறு? செச்சே! அதற்கு மேலே, அங்கே நடந்த பேச்சை நான்