பக்கம்:கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குலோத்துங்கன்

139


கின்றது. [1] இங்ஙனம் சோழநாடு நிலை குலைந்திருந்த செய்தியை வடபுலத்தில் போர் புரிந்து கொண்டிருந்த குலோத்துங்கன் அறிந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு விரைந்தான். அங்கிருந்த அமைச்சர், படைத் தலைவர் முதலியோர் சோழனுடைய மகள் வயிற்றுப் பேரன் என்ற உரிமை பற்றி இவனை அரசனாக ஏற்றுக் கொண்டு முடிசூட்டினர். அந்த நாளிலிருந்துதான் குலோத்துங்கன் என்ற அபிடேகப் பெயரைப் பெற்றான்; அதற்கு முன் அவனுக்கு வழங்கி வந்த பெயர் இராசேந்திரன் என்பது. அவன் அடைந்த வெற்றிகள், அவனுடைய ஆட்சி முறை முதலிய செய்தி


  1. "அருக்கனுதயத் தாசையி லிருக்கும்
    கமலமனைய நிலமக டன்னை
    முந்நீர்க் குளித்த வந்நாள் திருமால்
    ஆதிக் கேழலாகி யெடுத்தன்ன
    யாதுஞ் சலியா வகையினி தெடுத்துத்
    தன்குடை நிழலி லின்புற விருத்தித்
    திகிரியும் புலியுந் திசைதொறும் நடாத்திப்
    புகழும் தருமமும் புவிதொறும் நிறுத்தி”
                         (S. I. I. Vol 3. No. 66)
    "தென்றிசைத்
    தேமரு கமலப் பூமகள் பொதுமையும்
    பொன்னி யாடை நன்னிலப் பாவை
    தனிமையும் தவிர வந்து புனிதத்
    திருமணி மகுடம் உரிமையிற் சூடித்
    தன்னடி யிரண்டுந் தடமுடி யாகத்
    தொன்னில வேந்தர் சூட முன்னை
    மனுவாறு பெருகக் கலியாறு வறப்பச்
    செங்கோல் திசைதொறுஞ் செல்ல
                          (S. I, I, Vol II No. 701)