பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 69

3. கூகூர்ச் சுந்தரர் கோயில்

கூகூர் இந்நாளில் மருதாநல்லூர் என வழங்கப் பெறும்; குடந்தை வட்டம் சிற்றுார்களில் ஒன்று. இந்நாளில் ஆம்பரவனேசுவரர் என வழங்கும் ஆலயத்தின் பழையபெயர் ஆதித்யேஸ்வரம் என்பதாகும். இக்கோயிலில் நம்பியாரூரர்க்கு அமைந்த சிற்றாலயத்தில் சித்திரைத் திருவிழா நிகழ்த்தப்பெற்றது.

முதல் இராசராச சோழனின் பத்தாம் ஆட்சியாண்டில் நம்பியாரூரர் கோயிலில் சித்திரைத் திருவிழா நடத்துவதற்காக ஊர்ச்சபையார் கோலியக் குடையினர் நிலமும் மனையும் தந்தனர் (229 of 1917). இதே அரசனின் பன்னிரண்டாம் ஆண்டிலும் கூகூர் ஊரவர் திருப்பதிகங்கள் பாடிய நம்பியாரூரர்க்கு நிலம் கொடுத்தனர் (275 of 1917). இவ்விரு கொடைகளும் ஆதித்த ஈஸ்வரம் உடையார் கோயிலாரிடம் தரப்பெற்றன.

4. திருஞானம் பெற்ற பிள்ளையார்

திருஞானசம்பந்தர் சீகாழியில் இறைவியின் திருமுலைப்பால் உண்டு திருஞானம் பெற்றார்; திருஞானசம்பந்தராயினார். கல்வெட்டுக்கள் பல திருஞானம் பெற்ற பிள்ளையார் எனத் திருஞான சம்பந்தரைக் குறிக்கின்றன.

மூன்றாம் இராசராசனின் இருபத்து மூன்றாவது ஆட்சியாண்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோவிலுரில், மும்முடி சோழபுரத்து வியாபாரி ஒருவன் திருஞானம் பெற்ற பிள்ளையாரை எழுந்தருள்வித்தான்; நிலமளித்தான். கேரள குலாசனிச் சதுர்வேதி மங்கலத்துப் பெருங்குறி மகாசபையார் இறையிலியாக்கினர் (216 of 1918).

மன்னார்குடி வட்டம் கோட்டுர்க் கொழுந்தீசுவரர் ஆலயத்தில், மூன்றாம் இராசராச சோழனின் ஒன்பதாம்