உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 116


மயிலை சீனி வேங்கடசாமி கடைச்சங்க காலத்தில் இருந்த புலவர்களை இழுத்துக்கொண்டுவந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின் இருந்த வச்சிரநத்திச் சங்கத்தில் விடுகிறார்,

வையாபுரிப் பிள்ளை தாம் எழுதிய தமிழ்மொழி தமிழ் இலக்கிய வரலாற்றில் கூறுகிற இவை போன்ற வேறு பல போலிச் செய்திகளை இங்கு ஆராயாமல் இதனோடு நிறுத்துகிறோம்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

✽✽✽