பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

தமிழ்த் தொண்டு


ஆகிய இதிலேயே தங்களுடைய வாழ் நாளை அறிவைக் கழிக்கின்றனர்.

ஓர் புலவன், ஓர் புத்தகத்தை வெளியிட்டால் அதைக் கிறிஸ்தவன், முகம்மதியன், ஆங்கிலேயன், மற்ற உலகிலுள்ள எல்லா மக்களும் ஆவலுடன் படிக்கும் வகையிலே இருக்க வேண்டும். அதை விடுத்து தலைப்பிலேயே "தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டிற்கும் இறைவா போற்றி,” 'சிவமயம்' என்று மிக மிகக் குறுகிய மனப்பான்மையிலேயே இருந்தால், எப்படி நமது மொழியை எங்கும் பரப்ப முடியும் என்பதைக் சிந்தியுங்கள்.

நான் தோழர் சி.என். அண்ணாத்துரைத் அவர்கட்கும், தோழர்கள் சேதுப்பிள்ளை, சோம சுந்தர பாரதியார், ஆகியோர்களுக்கும் நடந்த விவாதங்களைக் கவனித்தேன். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு 'செந்தமிழ்ச் செல்வி" எனும் புத்தகத்திலே எழுதிய பாரதியார் தலைகீழாய்ப் புரட்டி, மனமார தன்னுடைய மனச்சாட்சிக்கு விரோதமாக மாறிப் பேசுகின்றார். ராவணன் ஆரியன் என்றும்: ராமன் திராவிடன் என்றும், உலகம் சிரிக்கும் வண்ணம், பிறர் ஒப்பா வண்ணம் பேசுகிறார்.

சேலத்திலே பாரதியார் அவர்கள் ராமாயணத்தில் ஊழல் களிருக்கின்றன, ஆனால் கலையாயிற்றே கலையை அழிக்கக்கூடாது என்று கூறினாராம். கலை


கவிஞர் பேசுகிறார்