பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலறிவும் - உணர்வும்

9


உணர்வு என்பதைச் சிறப்பித்து "உணர்வு எனும் பெரும் பதம்" என்றார் ஆழ்வாரும்.

தார்க்கீக அறிவுக்கும் உணர்வுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் தார்க்கீக ஞானமானது செயலில் வருவது துர்லபம். ஒன்றை அறிந்ததற்கு அறிந்தபடி செயல் செய்வதற்கும் இடையில் தாமதமேயின்றி அறிவும் செயலும் ஒரே நேரத்தில் நிகழ்வது உணர்வு.

நெப்போலியன், நூலறிவால், தார்க்கீக ஞானத்தால் காரியம் செய்யவில்லை எனவும், அவனது வெற்றி அனைத்தும் உணர்வின்பயனே எனவும் சொல்வர் பாரதியார்.

நமது நாட்டில் விவாதத்துக் குரிய நூலறிவும், கேள்வியறிவும் மிகுதியாகும். இதனால்தான் நம்மவர் செயலற்று கிடக்கின்றனர். பட்டறிந்ததின் பயனாகவாயினும் உணர்ச்சிபெறவில்லை.

உணர்ச்சி தேவை! உணர்ச்சி பிழை படுவதில்லை அது உண்மை. மெய்ம்மைகளை ஆதாரமாகக் கொண்ட அறிவும் செயலும் அன்றோ! அந்தோ உணர்வு பெறாதிருக்கின்றார்கள் தார்க்கீக ஞானிகள், நூலறிஞர்கள்.

கடவுட் பைத்தியம், மதப் பூசல், சாதி யிறுமாப்பு, மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் பட்ட தொல்லை பல பெரும் பாரதம்! இவைகளைத் தொலைக்க வேண்டும் என்பதை உணராதிருக்கின்


கவிஞர் பேசுகிறார்