பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழும் பாரதியும்

19


இந்த சமயத்தில் யாருக்கும் பயப்படாத சுதந்தரம் என்றால், என்ன என்பதை எளிய நடையில் சொல்லித்தர ஆள் தேவை. பிறந்தார் பாரதியார்! அவருக்கு எதிர்ப்பு இருந்ததா? அவர் அனுபவித்தது போன்று வேறுயாரும் அவ்வளவு சிரமங்களை அனுபவித்ததில்லை.

***

சூரியனை தினம் பார்க்கின்றான். கும்பிடுகிறான். சூரியனைப் பார்த்தானா அவன்? இல்லை; அவனுக்குக் கண் இல்லை; கவி பார்க்கிறான்; அதே சூரியனை இன்பத்தை - அழகை அனுபவிக்கிறான். எடுத்துச் சொல்லுகிறான். பிறகு அனைவரும் பார்க்கின்றனர். முன்பார்த்த அதே சூரியனை இப்பொழுது பார்த்து முன் காணாத இன்பத்தை இப்பொழுது காண்கின்றனர். குமரியை எல்லோரும் தான் பார்க்கிறார்கள். குமரியைப்பற்றிக் கேட்டால் அது முக்கோணமாக அமைந்திருக்கிற தெனச் சொல்வார்கள். ஆனால் கவி என்ன சொல்கிறார்.

நீலத்திரைக் கட லோரத்திலே - நின்று

நித்தத் தவஞ்செய் குமரி யெல்லை

அங்கே ஒரு குமரி யிருந்து தவம் செய்கிறாளாம். இது கவிஞனின் உள்ளம்.

***

பாரதியார் புதுவைக்கு வருமுன் தேசீய கீதமும் நாட்டு வாழ்த்தும் பாடினார். தேசீயப் பாட்டு


கவிஞர் பேசுகிறார்