பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழும் பாரதியும்

21


எங்களிடம் ஒற்றுமையில்லை யென்று என்னை ஏமாற்றாதே, சிந்தனை ஒன்று தான் என்று கூறுகிறார்.

ஜாதி - இது முன்னிருந்ததில்லை, பின்னுமிருக்க வேண்டாம் என்றார் பாரதியார். இதற்கு முன் கபிலர் சொன்னார், அவருக்குப் பெரிய ஆசாமிகள் கூடச்சொன்னார்கள், அவைகளெல்லாம் மூலையில் கிடக்கின்றன. ஆனால் பாரதியாருடையதை அப்படித்தூக்கி மூலையில் எறிந்துவிட முடியுமா? மற்றவர்கள் முன்னேறு வதைக்கண்ட தமிழனுக்குப்பசி ஏற்பட்டிருக்கிறதே, இருதயத்தைக் குலுக்கிச் சுடச் சுடச் கொடுத்தால் மூலையில் போட வருமா?

***

பாரதியின் கீர்த்தியைத் தொலைத்தார்கள். அவருக்குப் பணம் வராமல் தடுத்தார்கள், பெரியவர்க ளென்போரெல்லாம் எதிர்த்தார்கள்,

... ... ... ...வெள்ளைப்

பரங்கியைத் துரை யென்ற காலமும் போச்சே

என்று பாடியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி தான்! ஆனால் அதற்கு முன்னாலே இன்னொன்றைச் சேர்த்த்தில் தான் கசப்பு!


பார்ப்பானை ஐயரென்ற
காலமும் போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரை யென்ற

காலமும் போச்சே

கவிஞர் பேசுகிறார்