உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தமிழும் பாரதியும்


இல்லை யென்பது அவருடைய அகராதியில் தீர்ந்த விஷயம். "மூட நம்பிக்கைகளை ஒழித்தவர் பாரதியார். இந்த தேசம் உருப்பட வேண்டும். தமிழர்கள் சுதந்தரத்துக்கு லாயக்கானவர்களாக ஆக்கப்பட வேண்டும். தமிழினால் தான் தமிழர்கள் வீரர்களாக முடியும். தமிழ் வளர்ந்தால் தமிழன் உயர்வான்” இதுதான் அவரது மதம், அவர் முகமது, கிறிஸ்து, முத்துமாரி, சக்தி, எல்லாவற்றையும் பற்றிப் பாடியிருக்கிறார். தமிழில் இனிமையாக எதைப்பற்றியும் பாட முடியுமென்பது அவர் கருத்து. பாரதி முத்து மாரியம்மனைப் பற்றி பாடியிருக்கிறாரோ என்று ஒருவர் கேட்டால் தாராளமாக அவருக்கு அதை எடுத்துக் காட்டலாம்.

***

பாரதியார் பாட்டு யாருக்கு விளங்காது? அவர் இறையனார் அகப் பொருளைத் தான் பாடினார். ஆனால் இறையனார் அகப் பொருளை எடுத்துப்பார்த்தால் ஒன்றுமே விளங்காது. வித்வான் களெல்லாம் "உயர்ந்த பதமில்லையே இதற்கு வசனமாக எழுதி விடலாமே" என்பார்கள். எளிய நடையில் எழுதத் தானே முடியாது.

பக்தியினாலே - இந்தப்

பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடி!

கவி நேரே போய் நேரே வரவேண்டும். அதை விட்டு ப-க்-தி-யி-னா-லே என்று இழுத்துத் தாளங்


கவிஞர் பேசுகிறார்