பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசை என்பது என்ன?

39


கிழவர்க்கும் பாட்டு வெறி, இது மட்டுமா? பாடும் உணர்வே யில்லாதவன் கூட, மற்றவன் பாடும் விருத்தத்துக்குத் தாளம் போட்டுத் தலையசைத்து மகிழ்கின்றான்.

இவற்றை யெல்லாம் எண்ணித்தான் நம் தமிழையே மூன்றாகப் பிரித்து இசையை நடுவில் அமைத்தார்கள். மேலும் ஆய கலைகள் அறுபத்து நான்கில் பாட்டையும், ஓவியத்தையும், பெருங்கலை என்றும் இனிய கலை (லலித வித்யா) என்றும் கூறினார்கள்.


கவிஞர் பேசுகிறார்