பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையை மனப்பாடம் செய்தல் it; 1 பொருள்தயம் செறிந்த செய்யுட்கள், மொழியின் சிறப்பு, நாட்டு வாழ்த்து கடவுள் வாழ்த்து, ஆகியவற்றைக் கூறும் இன்னோசை யும் பொருட் செறிவும் உளக்கனிவும் பொதிந்த கவிதைகள், நல் லணிகள் செறிந்து விளங்கும்பாடல்கள் முதலியவற்றை மாணாக் கர்கள் இளம் பருவத்தில் நெட்டுருச் செய்வதற்காகத் தேர்ந் தெடுக்கலாம். கீழ்க்கண்டவற்றை ஒரு சில எடுத்துக்காட்டு களாகக் கொள்ளலாம்: நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து நிலாஎன்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தைக் கோல முழுதுங் காட்டிவிட்டால் காதல் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்! சொக்கவெள்ளிப் பாற்குடமோ? அமுத ஊற்றோ? காலைவந்த செம்பரிதிக் கடலில் மூழ்கிக் கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பி ழம்போ!' நாடிப் புலங்கள் உழுவார் கரமும் நயவுரைகள் தேடிக் கொழிக்குங் கவிவாணர் நாவும் செழுங்கருணை ஒடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும் உவந்துநடம் ஆடிக் களிக்கும் மயிலே! உன்பாதம் அடைக்கலமே.”* யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல், இளங்கோவைபோல், பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை; உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை; ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்: ஒருசொற் கேளீர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!’ தெளிவுறவே அறிந்திடுத்ல், தெளிவுதர மொழிந்திடுதல், சிந்திப் பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆநந்தக் கனவுபல காட்டல், கண்ணிர்த் 35. பாரதிதாசன்-புரட்சிக்கவி 25. தேசிக விநாயகம் பிள்ளை: 'மலரும் மாலையும் செய் 1. 27. பாரதியார்.தமிழ், செய். 1.