பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 கவிதை பயிற்றும் முறை இலக்கணம் தெரியாமலே அவற்றி ன் இசையின்பத்தில் திளைப்பர். மேல் வகுப்பிற்குப் போகப்போக, கவிதைகளைப் படித்துத் துய்க்கும் அநுபவம் பெருகப்பெருக, கவிதையின்பமும் வளரும். கவிப்பா அமுதம் இசையின் கறியொடு கண்ணன் உண்ணக் குவிப்பான்.' என்று கம்பநாடன் கூறுவதைப்போல், மாணாக்கர்கள் கவிப்பா இன்ப அமிழ்தமாவதையும், அஃது இசையுடன் சேர்த்து உண்ணப் பெறும்பொழுது தெவிட்டாத தெள்ளமுதமாவதையும் அறிவர். இந்த நிலையில் அவர்கட்குச் செய்யுட்களை அலகிட்டு அசை, சீர், தளை, அடி முதலியவற்றை அறியவும், அவற்றின் வாய் பாடுகளைத் தெரிந்துகொள்ளவும் ஒரளவு பயிற்சி அளிக்கலாம். இயல்பாக வந்த ஒலிவாய்பாடு திரும்பத் திரும்ப வருதலே பாட்டாகும் என்ற உண்மையை அவர்கள் உணரச் செய்யலாம். இந்நிலையை அவர்கள் நன்கு அறியச் செய்துவிட்டால்", வந்த சொற்களே திரும்பத் திரும்ப வரும் செயற்கை நிலையேற்பட்டு யாக்கப்பெறும் பாடல்கள் பாட்டு" எனும் தகுதியை இழந்து வெறுஞ் செய்யுளாக" நிற்கும் நிலையை நன்கு வேறுபடுத்தி உணரும் அறிவினைப் பெறுவர். செய்யுட்களை அலகிட்டுக் காணும் பயிற்சிகளைச் சிறுவர்கள் மிக நன்கு விரும்புவர். செய்யுட் களை வாய்பாடுகளாக அமைக்கும் முறை அவர்கட்குப் பெரி தும் இன்பம் அளிக்கும். பல்வேறுவகைப் பாடல்களின் யாப்பு முறை பல்வேறுவிதமாக அமைந்திருப்பதைக் கண்டு மகிழ்வர். இதனால் ஒலியை நுணுகி அநுபவிக்கும் பழக்கமும் அவர்கள் காது பெற்று விடும். நாளடைவில் பாக்களின் உயிர்நிலையை அறிந்து படித்து மகிழும் பழக்கம் அவர்களிடம் இயல்பாகவே அமைந்துவிடும். மேற்கூறிய பயிற்சி அவர்கட்கு வேறுவிதத்திலும் துணை செய்யும். ஆசிரியரோ பிறரோ பாடல்களை இசையூட்டிப் படிக் கும்பொழுது, அவர்கள் மனம் அந்த இசையில் நன்கு ஈடுபடும். என்றாலும், பாடல்களை அவர்களாகவே இசையேற்றிப் படிக் கும் பொழுதுதான் மாணாக்கர்கள் உண்மையான கவிதைச் சுவையில் ஈடுபடுவர். எனவே, மாணாக்கர்கள் கவிதைகளைப் 4. சடகோபந்தாதி.எ. our to G-Poetry 6.64 issujir-Versé