பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 கவிதை பயிற்றும் முறை னால் அவனைப்பற்றிய குறிப்புகளைத் திரட்டும் பொறுப்பை மாணாக்கர்கட்கே வி ட் டு வி டு த ல் நன்று; நூலகத்தி லுள்ள சில நூல்களைக் குறிப்பிட்டுக் காட்டி விட்டால் போதுமானது. இ வ் வி ட த் தி ல் நாம் ஒ ன் றி ைன வலியுறுத்த வேண்டும். கவிஞர்களே தம்மைப்பற்றி மறைத்து வைக்க விரும்பும் குறிப்புகளை மாணாக்கர்முன் கொண்டு வரு தலே கூடாது. கவிஞர்களின் சொந்த வாழ்க்கையைப்பற்றி மாணாக்கர்கள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அவ்வாறு அறிந்துகொள்ள முயல்வது நாகரிகமே இல்லை என்பது இந்நூலாசிரியரின் கருத்து. வாழ்க்கை வரலாறு கூறுவோர் ஒன் றையும் மறைக்காது கூறவேண்டும் என்று சிலர் கூறுவது பொருத்தமன்று; பண்பாடும் அன்று. என்னதான் ஆராய்ந்து முயன்றாலும், வாழ்க்கையில் நடந்தவை அனைத்தையும் திரட்டுதல் என்பது குதிரைக்கொம்பே. ஆனால் கவிஞர்களிடம் உள்ள சில குறைகளை அகழ்ந்து எடுத்துக் காட்டிவிடலாம்! அவற்றால் கவிஞர்கள் எவ்வளவு மட்டமானவர்கள்’ என்றும் உரைத்துவிடலாம். ஆனால் என்ன? கவிஞனைப்பற்றி நாம் ஒரு துணிவினைக் கொள்ளவேண்டுமாயின், நாம் அனைத்தையும் தெரிந்துகொண்டதாகத்தான் வேண்டும் என்ற ஒரு போலி நோக் கத்துடன் மிக்கமகிழ்ச்சியாகவே ஒவ்வொன்றையும் துருவித் துருவி ஆராயவும் கூடும். கவிஞர்கள் தவறுகள் இழைத்திருப்பார்களா யின், அவற்றை நாமும் இழைத்தல் எளிது; ஒருசிலரைப்போல் கீழான நிலைக்கு இறங்குதலும் கூடும். ஆனால், இவர்களைப் போல் உயர்வதுதான் அரிது. இவர்கள் கொண்ட உயர் கருத்து களைச்-ஆழ்ந்த கருத்துகளைச் - சிறந்த கற்பனைகளை நாம் அடைவது கடினம். இவ்வாறு ஆராய்வதால் 'நம்மையே காட்டிக் கொள்கின்றோம். கவிஞர்களின் வாழ்க்கையில் நம் முடைய வாழ்க்கையைத்தான் காண்கின்றோம்; நம்முடையகுறை களையும் நிறைவுகளையுமே இவர்களுடைய வாழ்க்கையிலும் காண்கின்றோம். அதற்குமேல் நம்மாலும் எட்டமுடிவதில்லை. கவிஞர்களும் நம்மைப்போல் மனிதர்களே என்ற எண்ணத்தை மாணாக்கர்களிடம் நிலவச் செய்யவேண்டும் என்று நாம் விரும் பினால், அதற்காகக் குறைகளைக் காண்பதில் அரும்பாடு பட வேண்டியதில்லை. கவிஞனைத் துணிவதற்கு நாம் யார்? கவிஞர் கள் படைப்புகளின் அழகுணர்ச்சி, அவர்கள் கூறும் வாழ்க்கை வுண்மைகள் ஆகியவற்றின்முன் நாம் நிற்கமுடியுமா? இளங்கோ வடிகள் போன்றவர்கள் கூறும், 10. நூலக வசதிகள் பள்ளியில் இருக்கவேண்டும் என்பது சொல்லாமலே பேர தரும்.