பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பிப்பவர் தகுதி 1 I செல்லுகின்றார் என்றும் கருத வேண்டும். படித்தலில் நிறுத்தமே கூடாது. வாழ்க்கை என்றால் அதில் துலக்கமும் இருக்கும்: மாற்றமும் காணப்பெறும். படித்தலில் ஒய்வு பெறுதல் என்றால் சாதலின் தொடக்கம்; அழிவின் அறிகுறி. கற்பிப்பதற்கு வேண் டிய கவிதைகள் ஆசிரியருக்குத் தெரியும் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், நாம் விரும்புவது கவிதையைப்பற்றிய அறிவு அன்று. வாழ்கையின் பொலிவு, மலர்ச்சி, வேலையின்மீது உற்சாகம் ஆகியவற்றையே நாம் விழைகின்றோம். இவை யாவும் கவிதை உயிருடன் நிலவும் ஆசிரியரிடம் மட்டிலுந்தான் காணப் பெறும்; அவரிடம்தான் உணர்ச்சிப் பெருக்கும் வற்றாது தோன்றும், மழையின்றேல் ஏரி நீர் வற்றிப் போகும். மணற் கேணி தொட்டினைத்துத்தானே ஊறும்? அது போலத்தான் கவிதையும். படிக்கும் அளவை யொட்டித்தானே கவிதைகள் உயி ரோட்டத்துடன் இலங்கும்?' 'கற்றனைத்து ஊறும் அறிவு.” ஒரு சிலர் தவறாக ஆசிரியத் தொழிலை மேற்கொண்டு ஆசிரியர் சமூகத்திற்கே இழுக்கினைத் தேடுகின்றனர். இவர்கள் தமக்குச் சிறிதும் பொருத்தமற்ற தொழிலிலிருந்து கொண்டு மாணாக்கர் களின் காலத்தை வீணாக்குவதைவிடத் தமக்கேற்ற தொழிலுக்குப் போய்விடுவது நல்லது. கல்வி என்ற தோட்டத்தில் இத்தகைய வர்கள் இருப்பதால், அவர்களிடம் அறிவு பெறும் மாணாக்கர் களாகிய இளஞ்செடிகளின் வளர்ச்சி குன்றிவிடுகின்றது. ஆசிரியத் துறையின் சிறப்பு: எல்லாத் துறைககளையும் விட ஆசிரியத் துறை மிகவும் சிறந்தது என்பதற்கு ஐயமில்லை. தம் மிடம் பயிலவரும் தெய்வ உருவங்கள் போன்ற சிறுவர்களின்அஞ் ஞான இருளை அகற்றும் நிலையிலுள்ளனர் ஆசிரியர்கள். எல்லாக் காலங்களிலும் அத்துறை அஞ்ஞான இருளையகற்றும்வழியாகவே அமைந்துள்ளது. ஆசிரியர்களும் அத்துறையைத் தாமாகத் தேர்ந் தெடுத்துக் கொண்டனர் என்பதை நன்கு அறிவர். வாழ்க்கை நடத்துவதற்கு ஏதோ அத்துறையால் சிறிது வருவாய் கிடைப் பினும், ஆசிரியர்கள் செய்யும் தொண்டிற்கு அது சிறிதும் இணை யாகாது. ஆனால், சிறந்த முறையில் கவிதை பயிற்றிய பிறகு தம் முன் அமர்ந்திருக்கும் நாற்பது அல்லது நாற்பத்தைந்து சிறுவர் களின் முகமலர்ச்சியைக் காண்பதற்கு இவ்வுலகில் வேறு எதை யும் ஈடாகச் சொல்ல முடியாது. ஆசிரியர் பெறும் மகிழ்ச்சிக்கு ஏதாவது ஈடு சொல்ல வேண்டுமாயின், பாரதப்போரில் கன்னன் தன் கடமைகளை நிறைவேற்றி விட்டதாகக் கொண்ட மகிழ்ச்சி யைத்தான் ஈடு சொல்லலாம்.