பக்கம்:கவிதை பயிற்றும் முறை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கவிதை பயிற்றும் முறை சிறுவன் அதை ஒருநாளும் மறக்கமாட்டான்; மறக்கவே முடி யாது. இயற்கை எப்பொருளை உள்ளத்தில் பதிக்கின்றதோ, அப் பொருளையே அதன் படமாகவுள்ள பாட்டும் பதித்தல் வேண்டும். அங்கனம் பதிவியாதது பாட்டன்று. அங்ங்னம் பாட்டைத் துய்க்கும் திறனை மாணாக்கர்களிடம் வளர்த்தல் ஆசிரியர் கையில்தான் உள்ளது. பொதுப்பறிந்து பணியாற்ற வேண்டியது ஆசிரியரின் தலையாய கடமையாகும். இதில் நற்பணி யாற்றுவதற்கு மாணாக்கர்களின் பல்வேறு நிலைக்கேற்றவாறு கவிதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கவிதைகளைத் தேர்ந் தெடுப்பது பற்றி அடுத்துக் காண்போம்.