பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்க் கலையின் தோற்றம்

103


 அது என்றும் அப்படியே இருக்குமோ என்று எண்ண அச்சந்தான் உண்டாயிற்று. பின்னவள் பலவகையால் விட்டுக் கொடுத்தமையினாலேயே அவர்கள் உறவும் அவர்கள் இருவரிடையில் என் உறவும் இனிமையாகக் கழிந்தது. நானும் எல்லாம் இனிமேல் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் இருவரோடும் யாதொரு வேறுபாடும் இல்லாமல் பழகினேன். அவர்கள் இருவரும் சிலவேளைகளில் எனக்குச் சோதனை காட்டுபவர்கள். பெரும்பாலும் நான் அவற்றில் வெற்றி பெறுவதுண்டு. ஒன்றே தற்போது நினைவில் உள்ளது. ஒரு பொருளை......என்ன வன்பது நினைவில் இல்லை-அவர்களுக்கு எட்டாத உயரிடத்தில் வைத்து விட்டு இருவரும் என்னனை அழைத்தனர். ஒருவர் அதை எடுத்துத் தம் கையில் தரவேண்டும் என்றனர். மற்றவர் அவ்வாறு செய்யக்கூடாது என்றனர். எதை மேற்கொள் வது என்று தடுமாறினேன். கடையில் அந்தப்பொருளை அங்கிருந்து எடுத்துச் சற்றே தாழ்வான இடத்தில் வைத்து விலகிவிட்டேன். இருவர் சொன்னதையும் செய்தும் விட்டேன்-செய்யவும் இல்லை என்று இருவரும் திருப்தியுற்றதாக என்னிடம் கூறி நான் சோதனையில் வெற்றி பெற்றதாகப் பாராட்டினர். ஆம் ! அந்த நல்ல மகிழச்சிக்கிடையிலே இருவரும் கருவுற்றனர். அது என் அன்னையர் இருவருக்கும் பெருமகிழ்ச்சி தந்தது. எட்டாவது மாதம் செய்யும் சிறப்பு இருவருக்கும் நடைபெற்றது. அடுத்தடுத்த நாட்களில் எங்கள் ஊரில் என் இல்லத்தில் தொடர்ந்து நடைபெற்ற அந்த விழாக்களில் ஒருவர் மாற்றி ஒருவர் எல்லாப் பொறுப் பினையும் ஏற்றுச் சிறக்கச் செய்தனர் இருவரும். வந்தவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். ஒருநாள் மாலை நடைபெற்ற சொற்பொழிவில் புரிசை சு. முருகேச முதலியார் அவர்கள் அவர்களைப் பாராட்டி அப்படியே என்றும் இருக்க வேண்டும் என வாழ்த்தினர். ஆனால் அந்த நிலை தொடர்ந்து இல்லை. இருவரும் மகபேற்றுக்காக அவரவர் தாய் வீடு சென்றனர். முன்னவள் பிறகு திரும்பவே இல்லை. பிள்ளை பிறந்