பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9. தோயாவாம் தீவினையே

காஞ்சி வாழ்வில் சமய ஈடுபாடு அதிகம் பெற்றேன். சமயநெறி போற்றும் கிறித்துவப் பள்ளியில் பணியாற்றியதும் அதற்கு ஒரு கரரணமாகலாம். நான் என் உயர்நிலைப் பள்ளிப் படிப்பினைச் செங்கற்பட்டுக் கிறித்துவப் பள்ளியில் படித்து முடித்தேன். அப்பொழுதே கிறித்துவ நூல்களைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு உண்டாயிற்று. எனினும் அதில் அதிகமாக நான் ஆழ்ந்து பயின்றது கிடையாது. அங்கிருந்த ஆசிரியர்கள் அப்பாடங்களைக் கட்டாயமாக்கியமை அதற்கொரு காரணமாகலாம். ஆயினும் காஞ்சியில் பணி ஏற்றபின் அவர்தம் சமய நூல்களை விரும்பிப் படித்தேன். பல கருத்துக்கள் என்னை ஈர்த்தன. சிலவற்றைப் பற்றிக் கிறித்துவ ஆசிரியர்களிடமும் வாதிடுவேன். நம் சமயத்தில் சொல்லாதனவற்றை அதில் சொல்லி இருக்கிறது என்ற எண்ணம் எனக்குக் கிடையாது. அந்த நாளிலேயே ஒரளவு சைவ வைணவ இலக்கியங்களையும் சமய சாத்திரங் களையும் பயின்றவனாதலின் அவற்றில் சொல்லாதனவற்றை விவிலிய நூல் கூறுகிறது என்று நான் கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் அந்நூலைப் போற்றும்முறை, பயிலும் முறை முதலியவைகளைப் பாராட்டினேன். இயேசு பெருமான் பல உண்மைகளைச் சில தெளிந்த உதாரணங்களால் எடுத்துக் காட்டும் சிறப்பினைப் போற்றினேன். என்றாலும் எனக்ரு உள்ளத்தில் ஒரு எண்ணம் உண்டு. எந்தச் சமயத்தவனும் அவ்வச்சமய உண்மைகளை உணர்ந்து பின்பற்றவில்லை என்பதுதான் அது. ஒருபுறம் கிறித்துவ நெறிபற்றிய நூல்களில் நான் ஈடுபாடு கொண்டேன் என்றாலும் மறுபடியும் சில கிறித்தவர் தம் வாழ்க்கை நெறியைக் கண்டு-அதுவும் வழிகாட்ட வேண்டியவர் வழுக்கிவிழும் வழியைக் கண்டுவெறுக்கவே செய்தேன். இந்தநிலை எல்லாச் சமயங்களிலும்