பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதை என் காதலி

23

எண்ணியதெல்லாம் பகற் கனவு என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

“தேவீ, எனது தவறுகளை யெல்லாம் நீ எடுத்துக் காட்டிவிட்டாய்; இப்பொழுது தான் உன்னிடம் சரண்புகுகின்றேன். என் உள்ளத்திலே வந்து நின்று நீயே இனிப் பேசு. உனது இனிய குரலுக்கு இசைவாக நான் சுதி சுட்ட முயல்கிறேன்” என்று பணிவோடு மொழிந்தேன்.

அவள் விழிக் கோணத்திலே நகை காட்டினாள். ஆஹா! அந்த இன்முறுவலிலே நான் கண்ட இன்பங்களை யெல்லாம் எழுத வசமாகுமோ!

இந்த உலகத்திலே கவிதைத் தேவி இல்லாத இடமில்லை. அவள் என் காதலி. அவளை நான் எங்கும் காண்கிறேன். காற்றில் அவள் மிதக்கிறாள்; கடல் அலைகளிலே அவள் தாண்டவம் புரிகிறாள். வானத்திலே அவள் நீலப்பட்டாடை நெளிகின்றது. எண்ணத்தின் இசையாக அவள் விளங்குகிறாள்.

அவளுடைய முழு அன்பையும் பெறுகிறவர்களே பாக்கியம் செய்தவர்கள். அவளை நாடி உள்ளம் ஏங்குகிறது. ஒருகணம் அவள் உடனிருக்க இசைகிறாள்; மறுகணத்திலே மாயமாக மறைந்து விடுகிறாள்! அப்பொழுது உலகமே இருண்டு போகிறது.

கவிதைத் தேவியின் அருளைப் பெறுவது எவ்வளவு கடினம் என்று தெரிகின்ற போதுதான் அவள் அருள் பெற்ற கவிஞர்களின் பெருமை புலனாகின்றது. ஹோம்ஸ் என்ற அறிஞர் எழுதுகிறார்: “கற்ப காலத்-