பக்கம்:காணிக்கை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 "நான் பெரியவன் ஆனப் புறம் தான் வருவாங்களா' அதிலே சோகம் கலந்து இருந்தது. இவ்வளவு பெரிய இடை வெளியை அவள் இல்லாமல் எப்படி நிரப்பு முடியும். 'நான் தான் பணிய வேண்டும்'. மது சொன்ன சொற் கள் நினவுக்கு வந்தன. அவள் ஒரு முதலாளி என்னை முழு அடிமைப்படுத்த நினைக்கிருள். உண்மைதான். மறுபடியும் கண்ணகியின் சிலை என் நினைவுக்கு வந்தது: அவளுக்கு ஏன் சில வைத்தார்கள்: அது இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. - "மாதவியின் வீட்டுக்கு ஏன் சென்ருய்?" என்ற கேள் வியை அவள் ஒரு நாளும் கேட்டதில்லை. 'அவளைப் பற்றிய நினைவை அகற்றில்ை தான் உன்னுேடு பேசுவேன்' என்று ஒரு நாளும் பேசவில்லை. எனக்குப் பின்னல் சொத்துக்கு வாரிசாக முரளியை நினைத்து வளர்க்கிருகள். என் அப்பாவும் அப்படித்தான் வளர்த்தார். அப்புசாமி அண்ட் சன்ஸ்' என்று தான் என் தந்தை இந்த பங்குக்குப் பெயர் வைத்தார். நான் 'நான் சன்ஸ் என்ற பெயரைத்தான் வைக்க வேண்டும். அவ்வளவு சொத்தையும் அவன் தன்சொத்தாக மதிக்க வில்லை. காதல்கலவையிலே போட்டுக் கரைத்தான். அவள் ஏன் என்று கேட்கவில்லை: எதற்கு என்று பேசவில்லை. கொள்க எனக் கொடுத்தாள் தன் காற்சிலம் பின; விற்க எனச் சொல்லி விடை தந்தாள். பத்து அப்படிச் சொன்னு ளா செல்லுவாளா, உனக்குப் பின்னல் யார் கவனிப்பார் கள் என்று கேட்பாள். கற் சிலையில் வாழும் கண்ணகியைப் பற்றி அவ்வப் பொழுது நினைத்துப் பார்க்கிறேன். இந்த ஒரு குணம் தான் எனக்குப் பிடித்திருக்கிறது. எங்கே போகிருய்' என்று கேட்கக் கூடாது என்ற பழக்கம். எவவளவு உன்னதமானது என்பது இப்பொழுதுதான் தெரிகிறது. போகிற வேலை கெட்டுவிடும் என்பதல்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/108&oldid=786817" இலிருந்து மீள்விக்கப்பட்டது