பக்கம்:காணிக்கை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 அதல்ைதான் அதைக் கொஞ்சம் சொல்ல வேண்டி யிருக்கிறது. அன்று அவள் பாதிக்கப்பட்டாள். அன்று முரளி தலைக் கட்டோடு வீடு திரும்பினன். உயிருக்கு வந்தது தலைக் கட்டோடு நின்றது. அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. இந்த நாட்டு அரசியல் சூழ்நிலையை அடியோடு வெறுத்தேன். வெறுக்க வேண்டி இருந்தது. 'முரளி என்ன செய்தான். அவன் ஒரு தவறும் செய்யவில்லை. அவன் அன்று டாக்சியில் செல்லாததுதான் தவறு. எல்லோரும் எப் போதும் டாக்சியில் போக முடியுமா! அன்று அவள் போயிருப்பாள். பஸ் ஸ்ட்ரைக் என்ருல் டாக்சி எங்கே கிடைக்கிறது. அது யானைவிலை குதிரை விலை என்ற பழமொழிக்கு இலக்காகி விடுகிறது. இல்லாவிட்டால் அவள் டாக்சியில்தான் போயிருப்பாள். முன் டாக்சியில் தானே போனுள். "ஏன்பா அவர்கள் என் மண்டையை உடைத்தார்கள்? என்று கேட்டான். 'அவர்கள் மண்டையில் மூளையில்லை' என்றேன். 'இல்லேப்பா பயித்தியம்" என்ருன். அவனுக்குப் பழக்கமான அந்தச் சொல் என்னைச் சிந்திக்க வைத்தது. அவன் எங்கே குறை கண்டாலும் அங்கே அந்தச் சொல்லைத் தான் பயன்படுத்துவது பழக்கமாகிவிட்டது. "மாணவர்கள் கண்டக்டர்கள் மோதல்' என்றேன். 'அதற்கு நான் தான் கிடைத்தேன' 'நீ ஒருவன் தான் இதை எதிர்பார்த்து இருக்க மாட்டாய்' என்று கூறினேன். "பைத்தியக் காரன்தான் கண்டபடி கல் எடுத்து அடிப் பான்' என்று அவன் விமரிசனம் செய்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/111&oldid=786821" இலிருந்து மீள்விக்கப்பட்டது