பக்கம்:காணிக்கை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

யும் என்று நீ நினைக்கிறே".

“ஏன் எல்லாருக்கும் தெரியுமா?”

“தெரியும் பாடமாட்டார்கள்; அதுதான் வித்தியாசம்”.

“அப்படீன்னா ஒரு பாட்டுப் பாடுங்க பார்க்கலாம்”.

“பொன்னார் மேனியனே” என்ற பழம் பாட்டைப் பாடினேன். அதாவது நான் சின்ன வயசிலே அதாவது முரளி வயது என்று நினைத்துக்கொள்ளுங்களேன். அவனை விட கொஞ்சம் வயது அதிகம். அந்தக் காலத்திலே ஆறு வயதுக்குத்தான் டீச்சர் அம்மாவைப் பார்க்கமுடியும்.

இப்ப பிறந்தவுடனே L. K. G., U. K. G. இப்படி ஏதாவது சொல்லுவாங்க. அவர்கள்தான் அந்தக் குழந்தைகளுக்கு மழலை மொழியே கற்றுத் தருகிறார்கள். அம்மாவை ‘மம்மி'யாக்கி அனுப்புகிறார்கள்; அப்பாவைத்'தாடி'யாக்கி அனுப்புகிறார்கள்.

அந்த வயதிலே அப்பொழுது எல்லாம் இந்தக் கார்ப்பரேஷன் பள்ளிக்கூடங்களிலே இந்தப் பாட்டுத்தான் பாடுகிறார்கள். 'பொன்னர் மேனியனே’ இப்பொழுது என்ன பாடுகிறார்களோ தெரியவில்லை. எல்லாம் சேர்ந்து பாடுகிறார்கள். மணியடித்தவுடன் பிரார்த்தனை. அங்கேதான் எல்லாம் ஒன்றாகக்கூடுகிறார்கள். ஒரே பாட்டு; வருஷம் முழுவதும் அதேபாட்டுத்தான். அதை என்வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாமல் செய்துவிட்டது. பாட்டு என்றாலே அந்த ஒரு பாட்டுத்தான் தெரியும். அது தெரிந்ததால்தான் அன்றைக்கு அவளிடம் பாடிக் காட்ட முடிந்தது.

அவள் ஒரே சிரிப்பு சிரித்தாள்.

“ஏன் சிரிக்கிறே?”

“உங்க பாட்டு”

“ஏன் நல்லா இல்லையா? ”

“ரொம்ப கருநாடகம்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/12&oldid=1320678" இலிருந்து மீள்விக்கப்பட்டது