பக்கம்:காணிக்கை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அந்த எழுத்துகளை அவன் கல்லறையில் செதுக்கச் சொன்னேன். 'ஜனநாயகத்தை வன்முறையால் அழித்து முடித்த அக்கிரமக் காரர்களுக்குக் காணிக்கை' என்று எழுதி வைக்கச் செய்தேன். கடற்கரையில் அந்தத் தொழிலாளியின் வெற்றி" என்ற சிற்பம் என் மனத்தை விட்டு அகலவே இல்லை. என் மனைவி மட்டும் அழுது கொண்டே இருந்தாள். நான் அழவில்லை. என் மகனை ஒரு நினைவுச் சின்ன மாக எழுப்பி விட்டேன். 'தாஜ் மகாலப் பார்க்க வேண்டாம். என் மகன் கல்லறையைப் பாருங்கள்' என்று இந்த உலகத்துக்குச் சொல்வதை விட வேறு என்ன சொல்ல முடியும்? அதை விட நான் எழுப்பிய கல்லறை எழுத்துகள் இந்த நாட்டுக்கு அவசியம் என்று நினைக்கிறேன். மறுபடியும் பதினறு வயதினிலே படத்தில் அவன் வரும் வரை அவள் காத்திருந்தாள். இனி என் மதுவை என்றும் காண முடியாது. அவள் மறைந்து விட்டாள். இந்த மனித கூட்டத்தில் நிச்சயமாக அவள் எங்கோ ஒரு குடும்பம் நடத்திக் கொண்டிருப்பாள். முரளி அங்குச் சென்று நிச்சயமாகப் பிறந்திருப்பான். அவள் அவனோடு விளையாடிக் கொண்டிருப்பாள். மாணிக்கம் அந்த விளையாட்டில் தன்னைப் பறிகொடுத்து இருப்பான். இந்த மூன்று உருவங்களை ஒன் ருகச் சேர்த்துக் காண்கிறது என் மனம். இப்படித்தான்என் மனம் அமைதி கொள்ள முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/121&oldid=786832" இலிருந்து மீள்விக்கப்பட்டது