பக்கம்:காணிக்கை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

அது ரொம்ப கேட்கவே பிடிக்காது. அவள் காலேஜிலே படித்துக் கொண்டிருந்தாள். அவள் எப்பவும் தனியாகவே போக மாட்டாள். அவள் எப்படித் தனியாகப் போக முடியும் அவள் ரொம்ப அழகாக இருந்தாள். அழகாக இருந்தால் இது ஒரு தொந்தரவு; தனியாகப் போக முடியாது. போனால் வழியிலே கமெண்ட் அடித்துக் கொண்டே இருப்பார்கள். அவள் எப்பொழுதும் பொழுதோடு வீட்டுக்குப் போய் விடுவாள்.

அன்றைக்கு காலேஜிலே ஒருநாடகம், அதிலே அவள் நடிக்கவில்லை. பார்த்தாள்.நேரம் ஆகிவிட்டது.எல்லோரும் போய்விட்டார்கள். அவள் எப்படித் தனியாகப் போக முடியும்.

துணிந்து பஸ் ஸ்டாண்டிலே வந்து நின்றாள். இதைச் சொல்லும்போது ‘அக்கினிப்பிரவேசம்' கதைதான் கவனத்துக்குவருகிறது, அப்படிஅவள் ஏமாந்தவள் அல்ல; புத்திசாலிதான். என்னசெய்வது இரண்டு முரட்டுஆட்கள். வர வர இப்பொழுது இப்படித்தான் ஆட்கள் முரட்டுத்தனமாக ஆகிக் கொண்டு இருக்கிறார்கள். நான் பார்க்கிறேன். என் கண் எதிரேதான் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அவர்கள் என்ன செய்கிறர்கள்? போகிற பஸ் வருகிற பஸ் இது எல்லாம் நிறுத்தி விட்டு ஒழிகஎன்று கிறுக்குகிறார்கள். அது பரவாயில்லை. கண்ணாடி எல்லாம் உடைத்து நொறுக்குகிறார்கள்.

அப்பத்தான் நினைத்துக் கொள்வேன் அந்த உழைப்பாளியின் சிலை. உழைப்பால் உருவாகிய ‘பஸ்’ இது. ஒரு நிமிஷத்தில் உடைத்துப்பாழ்படுத்துகிறார்கள். ஒடும் ரயில் வண்டியை நிறுத்திக் கொளுத்துகிறார்கள், ஐம்பது லட்சம் மதிப்பிடுகிறார்கள் அப்படிச் சொல்கிறார்கள். எனக்கு எப்படித் தெரியும். அதை நிறுத்திக் கொளுத்திப் பாழ் பண்ணி விடுகிறார்கள். இந்தத்தேசத்துக்கெவ்வளவுபெரிய நஷ்டம். ஐம்பது பேர் சேர்ந்து அழித்து விடலாம், அதைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/18&oldid=1321125" இலிருந்து மீள்விக்கப்பட்டது