பக்கம்:காணிக்கை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

"அது எப்படி உனக்குத் தெரியும்?"

"ஸ்கூட்டரில் நீங்கள் மட்டும்தானே இந்தக் கடற்கரைச் சாலையில் சென்றீர்கள்?"

அவளை அந்த நேரத்துக்கு மறுக்க விரும்பவில்லை. அதற்கப்புறம் நன்றி என்ற மூன்று எழுத்தால் முடித்து விடுவாள். அது மங்கலகீதமான சொல்; அதை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை.

"அந்த ஸ்கூட்டர் காலியாக இருந்ததால்தானே நீ உட்காரமுடிந்தது" என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். என்னை இறுகப் பிடித்துக்கொண்டாள்.

என் மனம் என்னை உறுத்திற்று. அந்தப் பிடியிலிருந்து என்னால் விலக முடியவில்லை. விடுதல் அறியா விருப்பம் என்னுள் எழுந்தது.

"என்னைப் பார்த்தால் உனக்கு எப்படித் தோணுது?"

'கலியாண மாப்பிள்ளை ஆகவேண்டிய வயது என்று தெரியுது"

'நீ என்னை"

வெட்கம் அவளைக் கவ்வியது.

"வெறுக்க மாட்டேன். நீங்கள் வந்து காப்பாற்றாவிட்டால் நான் ஒரு கண்ணகியாக மாறி இருப்பேன்"

"அப்படீன்னா”

“அவர்கள் குடலைப்பிடுங்கி மாலையாகப் போட்டுக் கொண்டு இருப்பேன். உண்மையில் நான் கண்ணகியாக மாறிவிட்டு இருப்பேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/24&oldid=1321248" இலிருந்து மீள்விக்கப்பட்டது