பக்கம்:காணிக்கை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

"சொல்லத் தேவை இல்லை. அதனால் எதையும் நான் இழக்கவில்லை” என்றாள்.

“ஏன்?”

"தங்களை மணக்க விரும்பவில்லை. பழகத்தான் விரும்பினேன்.

“எனக்காக ஒர் உண்மையை மறைத்தீர்களே அது தான் என்னைக் கவர்கிறது. என்னிடத்தில் உங்களுக்கு இருக்கின்ற ஈடுபாட்டை அது காட்டிற்று," என்றாள்.

எனக்கு இது வியப்பாக இருந்தது.எந்தத் தவறுக்காக வெட்கப்பட்டேனோ அதனையே அவள் பாரட்டினாள்.

நான் இதுவரை பெண் என்றால் அவள் காதலுக்குத் தான் உரியவள் என்று நினைத்தேன். அவள் பழகுவதற்கும் இனியவள் என்பதைக் காட்டினாள்.

இந்தக் கடற்கரைக் காட்சி என் உள்ளத்துக்கு இனிமை தருகிறது. அங்கே அவள் சில நாட்களில் வரமாட்டாள். அவள் எப்படி வரமுடியும்? அவள் படிக்கும் மாணவியாயிற்றே. தேர்வுகள், படிப்புகள் என்னென்னமோ சொல்கிறார்கள். பலநாள் அவளைச் சந்திக்க முடியாது. நூல் நிலையங்களுக்குச் சென்று விடுவாள் படிப்பதற்காக, கட்டுக் கட்டாகப் புத்தகங்கள் அவள் கரங்களில் தவழும்; அந்தப் புத்தகங்கள் அவ்வளவும் படித்துத் தானே அவள் அறிவு பெறுகிறாள்.

எனக்கே கொஞ்சம் வெட்கம் ஏற்பட்டு விடும். ஒரு பெண் இவ்வளவு படிக்கிறாள். நான் என்ன செய்தேன். என் அப்பன் வைத்து விட்டுப் போன சொத்தை மூலதனமாக வைத்து என் வாழ்க்கையைத் தொடங்கினேன்; தொடருகிறேன். அதையே என் முரளிக்கு வைத்துச் செல்கிறேன். அதை நம்பித்தான் என் மனைவியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/49&oldid=1325678" இலிருந்து மீள்விக்கப்பட்டது