பக்கம்:காணிக்கை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 விண்ணப்பம் போடுகிருர்கள். வேலைக்குத் திண்டாடு கிறர்கள். பிறகு எப்படியோ ஒரு வேலையைப் பிடித்துக் கொள்கிறர்கள். யாரோ ஒரு சிலர்தான் மேல் படியை எட்டிப் பார்க்கின்ருர்கள். பல பேர் சாதாரண குமாஸ்தாக் களாகவே மாறுகிறர்கள். பிறகு 'இன் கிரிமெண்டு பற்றக் குறை. இதுதானே இன்றைய சராசரி படித்தவர்களின் கஷ்டம். இந்த உலகத்தையே மறந்துவிடுகிறர்கள். குடும்பம் குழந்தைகள் நோய் நொடி இந்தப் போராட்டங்கள். யாரோ ஒருவர் என்னைப் பார்த்து ஒரு சின்ன கேள்வி கேட்டார். 'குழந்தைகள் மட்டும் சின்னச் சின்ன விஷயத்துக் கெல்லாம் சிரிக்கின்றனவே வயதானவர்கள் ஏன் சிரிக்க மாட்டார்கள்?'. 'குழந்தைகளுக்கு வாழ்க்கை சுமையாக இல்லை. அவர்கள் மற்ற பர்களுக்குச் சுமையாக இருக்கிருர்கள். அவர்களுக்காக மற்றவர்கள் கஷ்டப்படுகிறர்கள். அதனல் அவை சிரிக்க முடிகின்றன" என்றேன். - எப்படியோ நான் படிக்கவில்லை. அதை ஒரு குறை யாகவே நினைக்கிருள் பத்மினி. அதுதான் என் மனைவியின் பெயர். நான் அவளைப் பத்து' என்றுதான் கூப்பிடுவேன். 'எல்லாரையும்தான் பத்து மாதம் சுமக்கிருர்கள்" என்று அவள் கிண்டலாகச் சொல்லுவாள். அப்படியானுல் உன்னை மினி' என்று கூப்பிடுகிறேன் என்பேன். "அவள் வேண் டாம் நான் பத்தாகவே இருக்கிறேன்" என்பாள். அந்தக் கடற்கரைக் காட்சியைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அது எனக்குப் பொழுதுபோகும் இடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/51&oldid=786957" இலிருந்து மீள்விக்கப்பட்டது