பக்கம்:காணிக்கை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சென்னையில் குடியில்லை, அதாவது, அவர்கள் பெற்றேர்கள் சென்னையில் இல்லை என்பது அர்த்தம். அங்குக் கடற்கரைக் கட்டடங்களுள் ஒன்றில் விடுதி ஒன்று இருந்தது. அங்கே ரொம்பவும் கட்டுப்பாடு அதிகம். ஏழு மணிக்கு எல்லாம் உள்ளே போய்விட வேண்டும். நான் அங்கே செல்வது இல்லை. விசிட்டர்கள் அனுமதிக்கப்படுகிறர்கள் என்று சொல்வார்கள். நான் செல்வது இல்லை. அங்கு நான் அவளுக்கு எந்த உறவு என்று எப்படிச் சொல்வது. என் ஸ்கூட்டரில் அவள் பின்னுல் ஏறிச்சென்றல் அவர்கள் கதை கட்டுவார்கள். அவளுக்கு நான் காதலன் என்று சொல்லுவார்கள். அதில் ஒன்றும் தவறு இல்லை.அதை அவள் ஒப்புக் கொள்ள மறத்துவிட்டாள். என்னிடம் அவள் நட்பைத்தான் விரும்புகிருள். முக்கியமாக என்ைேடு பொதுச் செய்திகள் தான் விமரிசிப்பாள். அன்ருட அரசியல் பேசுவதில் தனி அக்கரை காட்டினுள். அவள் சொல்லுகிருள் ரொம்ப பேர், அரசியலை ஒதுக்குகிருர்கள் அது தவறு என் கிருள். 'அரசியல் அயோக்கியர்களின் புகலிடம் என்று யாரோ எழுதி வைத்தார்களாம். அதுவும் அவள்தான் சொல்லுகிருள். அப்படி எழுதியிருக்கக் கூடாது. அதுதான் உண்மையான தொண்டு செய்வதற்கு வாய்ப்பு அளிக் கிறது என்று சொல்கிருள். இளைஞர்கள் மாறிவிட்டார்கள். அரசியலில் இருந்து அவர்கள் ஒதுங்குவது இல்லை என்று கூறுகிருள். எனக்கு என்ன தெரியும் இந்தக் காலத்தில்படிக்கும் இளைஞர்களைப் பற்றி. அடுத்து சினிமாவும் புறக்கணிக்கக் கூடாது என்று கூறுகிருள். இதில் மிகக் குறைந்த செலவில் மிக்க பயன் கிடைக்கிறது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/53&oldid=786961" இலிருந்து மீள்விக்கப்பட்டது