பக்கம்:காணிக்கை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 திடீர் என்று அவன் சிரிப்பான். இப்பொழுது அல்ல. இரண்டு வருஷங்களுக்கு முன். அவன் அப்பொழுது இவ்வளவு அறிவு பெறவில்லை. - அவன் சிரிப்பு எங்களுக்குச் சொல்ல முடியாத சந்தோஷத்தைக் கொடுக்கும். இப்பொழுது அவன் எங்களைப் பார்த்துச் சிரிக்கிருன். கேள்வி கேட்டுவிட்டுச் சிரிப்பான், அவன் கண்ணில் நான் ஒரு பயித்தியமாகக் காணப்பட்டேன். "ஏண்டா நீ யாரையாவது பைத்தியக்காரனைப் பார்த்திருக்கிருயா?" 'இல்லை அம்மா உன்ன்ை அப்படிச் சொல்லுகிருள்." எப்படி இந்தப் பழக்கம் இந்த முரளிக்கு ஏற்பட்டது என்பதை அப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். அவனுக்கு என்னைப் பற்றிச் சரியான அபிப்பிராயம் கிடையாது என்று தெரிந்து கொண்டேன். ஒரு நாள் தூக்கத்திலே ஒரு கனவு கண்டேன். மதுவும் நானும் ஒரு மாந்தோப்புக்குப் போகிருேம். அவள் மரத்து மேலே ஏறிக்கொண்டு பழங்களைப் பறிக்கிருள். அவள் மட்டும் கடிக்கிருள்."மது மது எனக்கு'என்கிறேன். தூக்கத்தில் 'மது மது' என்று கத்திவிட்டேன். அவள் என்னை உணர்த்தினுள். 'என்ன மயக்கமா?' என்று கேட்டாள். 'இல்லை தூக்கம்" என்றேன். 'மது என்றீர்களே' "அதுதான் ஒழித்து விட்டார்களே? என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/56&oldid=787030" இலிருந்து மீள்விக்கப்பட்டது