பக்கம்:காணிக்கை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 'அன்று அவர் காப்பாற்ருவிட்டால் நான்' "என்ன ஆகி இருக்கும். உன் படிப்புப் பாழாகி யிருக்கும்.' "நான் ஒரு உதவாக்கரையாகிவிட்டிருப்பேன்." "ஏன் நீ வீரம் பேசுவாயே' "அப்படிப் பேசிப் பழக்கம். ஆனல் செயலிலே முடியுமா? அவர் கிட்டேகூட அப்படித்தான் சொன்னேன். இதோ பார் என்னிடம் கத்தி." 'கத்தி இருப்பே அவ்வளவுதான் முடியும்." "அதுதான் கத்தி என்றேன். அவரும் நம்பிவிட்டார். நம்ம N. C. C. பயிற்சியிலே இந்த மாதிரிச் சூழ்நிலையை எப்படிச் சமாளிக்க முடியும். சும்மா விட்டுக் கொடுக்கா மல் பேசினேன்." "அதல்ை காதல் ஏற்பட்டு விட்டது.' "ஏற்பட்டு இருக்கலாம். ஆனல் அவர் கதாநாயகன் ஆக முடியாதபடி தடுக்கப்பட்டார். அவர் Father ஆகத் தான் நடிக்க முடியும். அவருககு ஒரு பையனும் இருக்காரு." 'பின் எப்படி அவரிடம்' "அதுதான் நட்பாக மலர்ந்து விட்டது.' 'இதை உலகம் ஒத்துக்காது." "நீயே ஒப்புக்கொள்ள மாட்டாய். அது தெரியும். ஆனல் காதலுக்கும் நட்புக்கும் ரொம்ப வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை." -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/60&oldid=787087" இலிருந்து மீள்விக்கப்பட்டது