பக்கம்:காணிக்கை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.66 'நான் அரசியலையும் சமூக இயலையும் பாடம் எடுத்துப் படிக்கிறேன். அதல்ை இப்படிச் சிந்திக்கிறேன்" என்று கூறினள். நான் படிக்காததே மேல் என்று தெரிந்தது. இந்த மாதிரி மேல் படிப்புப் படித்து இருந்தால் சாதாரண விஷயங்களை எல்லாம் இப்படித்தான் பார்ப்பேன். அப்புறம் எதையும் லேசாக எடுத்துக்கொள்ள முடியாது என்று பட்டது. 'அதாவது அவள் ஒத்துழையாமை நடத்துகிருள் என்பது அர்த்தம். அவள் தாய் வீட்டுக்குச் சென்று விட்டால் நீங்கள் தனியாக விடப்படுவீர். உங்களுக்கு அவள் தேவை. அது இயற்கை, அந்தத் தேவையை மறுத்துவிட்டால் நீங்கள் அவளுக்கு முழு அடிமையாகி விடுவீர்கள். இது ஒரு முதலாளித்துவத் தனம்' என்று கூறிள்ை. - எனக்கு இந்த வாதம் எல்லாம் புரிந்து கொள்ள முடியவில்லை. - "அதே போலத்தான் ஆண்களும் நடந்து கொள் கிருர்கள். பெண் அவள் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும். ஒரு பெண் நல்ல பெயர் வாங்க வேண்டு மால்ை 'கணவன் சொற்படி நடப்பவள்’ என்ற பெயர் எடுக்க வேண்டும். நீங்கள் நினைத்துப் பாருங்கள்.இதிலே ஒரு முதலாளித் துவம் இல்லை என்று கூற முடியுமா? அடிமைதான் சொன்ன சொல் பேச்சுக் கேட்டு நடப்பான். அதே போல மனைவி தனக்கு முழு அடிமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் பலர் இருக்கின்ருச் கள், இதெல்லாம் மனிதக் கட்டுப்பாடுகள் என்று கூறி விளக்கிள்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/67&oldid=787103" இலிருந்து மீள்விக்கப்பட்டது