பக்கம்:காணிக்கை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

"ஏன் உங்களோடு வந்திருக்கக் கூடாது? அப்புறம் அதை நினைத்துக் கொண்டே வேதனையோடு பிரிந்து விட்டேன்". என்றாள்.

அதாவது அன்று படம் பார்க்க அழைத்தேன். அவள் என்னோடு வர விரும்பவில்லை. யாருக்கோ எதற்கோ அஞ்சினாள்.அவளோடு மற்றொரு பைத்தியமும் இருந்தாள். அவள் ஒரு சினிமாப் பைத்தியம். அதனால் அவளைப் பயித்தியம் என்றேன்.

எந்தப் புதுப்படம் வந்தாலும் ஒடிவிழுந்து அடித்துக் கொண்டு முன்னலே நிற்கும். அதனால் தான் அவளைப் பைத்தியம் என்று சொல்வது உண்டு.

என்னைக் கூட சிலபேர் 'அரைப்பைத்தியம்' என்று சொல்வார்கள். அதாவது எது எனக்குப் பிடிக்கிறதோ அதை விடாமல் தொடர்வேன். அதைத்தானே பைத்தியம் என்று பலபேர் சொல்லிக் கொள்கிறர்கள். அது சிலசமயம் அவசியம் என்றுதான் படுகிறது. ஏன் இப்படிச் செய்யக் கூடாது என்று கேட்டு ஏதாவது தவறு செய்து விடுவேன்.

அந்த மாதிரி ஏன் இப்படிச் செய்யக் கூடாது என்ற பைத்தியக்காரத் தனத்தில் இதுவும் ஒன்று. "ஏன் அவளைக் காதலிக்கக் கூடாது? இது என்ன பெரிய தப்பா?

தப்பு என்றுதான் அவள் சொல்கிறாள்

அதாவது நான் மணமானவன்; ஒரு குழந்தைக்குத் தந்தை. இந்த உயர்வைப்பெற்றபிறகு மறுபடியும் தாழ்ந்து போவது என்பது அவள் ஒப்புக்கொள்ள வில்லை, இதைத் தான் அவள் என்னை அரைப்பயித்தியம் என்று சொன்னாள்.

“நான் சொன்னேன்.நான் முழுப் பைத்தியம் இல்லை; கால் பைத்தியம்தான். ஏன் தெரியுமா? என்னை அறியாமல் உன் பின்னால் என் கால் செல்கிறது. அதனால் நான் கால் பைத்தியம்” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/7&oldid=1320637" இலிருந்து மீள்விக்கப்பட்டது