பக்கம்:காணிக்கை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 "கற்பு அழியுமே என்று நான் அஞ்சவில்லை. அது உன்னல் அழிக்கப் படுமானுல் அதனை வரவேற்கிறேன்; அந்தத் துச்சாதனின் துகிலில் என் கற்பு எப்பொழுதோ அழிந்து போய் இருக்கும். அந்த வன்முறையாளர்களிடம் என்கற்பும் அழிந்து இருக்கும்; நானும் அழிந்துஇருப்பேன். அந்த விபத்தில் இருந்து காப்பாற்றிய நீ அதை அழிக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். ஆக்க நினைவு உடையவர்களுக்கு அழிக்கத் தெரியாது" என்ருள். அதை இன்னும் நினைத்துப் பார்க்கிறேன். அவள் நெஞ்சு உரம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. அம்மா என்று தூக்கத்தில் அலறின்ை முரளி, "என்னடா கண்ணு' "நீ சின்ன அம்மா' என்றன். அப்பொழுதுதான் அந்த இடத்தை அவளால் நிரப்ப முடியாது என்பதை உணர்ந்தாள். 'இல்லேடா நானும் அம்மாதான்' என்ருள். 'அவன் சின்ன வயதில் பால் குடித்து இருக்கிருன். அவன் மெல்லிய கைகள் அதற்கு இடம் கொடுக்கவில்லை. மறுநாள் காலையில் அவள் தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள். 'பத்மினியின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது' என்று அவள் குறிப்பிட்டது யாரை என்று என்னல் முழுவதும் தெரிந்து கொள்ள முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/83&oldid=787139" இலிருந்து மீள்விக்கப்பட்டது