பக்கம்:காணிக்கை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

“அவர் நான் கிழித்த கோட்டைத் தாண்டமாட்டார்” என்று சொல்லிப் பெருமைப் படுகிறாள்.

ஒரு நாள் காப்பி கொண்டு வந்து வைத்தாள். ரொம்பவும் சூடாக இருந்தது. நான் எப்படிக் குடிக்க முடியும்! அப்படியே வைத்து விட்டுப்போனாள். நான் கவனிக்கவே இல்லை.

அவளுக்கு ஒரு கடிதம் எழுதிக்கிொண்டிருந்தேன். அது தான் என் சிநேகிதி; அப்படித்தான் அவள் என்னைப்பற்றியும் சொல்கிறாள்;அதாவது காதல் கடிதம்எழுதிக் கொண்டிருந்தேன்.அதுதான் என் சிநேகிதியும் சொல்கிறாள். நானும் அப்படித்தான் சொல்கிறேன். அதாவது காதல் கடிதம் எழுதிக் கொண்டு இருந்தேன்; அப்படி என்றால் அவள் எப்படி என் சிநேகிதி ஆக முடியும்? சே! அதுதான் நல்ல சொல்; தப்பு இல்லாத வார்த்தை; என் சிநேகிதி வாழ்க!

அந்தக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தேன். காப்பி ஆறிவிட்டது. சில்லென்று இருந்தது. எப்படி அதைக் குடிக்க முடியும். “சே இது ஒரு காப்பியா” என்று அதை என் மனைவியைப் பார்ப்பது போல் பார்த்தேன். அந்தப் பார்வையில் சூடு இல்லை. அப்படி என்றால் என்ன அது? எனக்குத் தெரியாது.

“ஆறினகஞ்சி பழங்கஞ்சி தானே. எது? காப்பி.இல்லை; எல்லாம் அப்படித்தான்”. அவள் சொன்னாள்."நான் வரும்போது சூடாகத்தான் இருந்தது.இப்பொழுதுஆறிவிட்டது” என்று சொன்னாள். அவள் எதை நினைத்துக் கொண்டு அப்படிச் சொன்னாள். அது தெரியாது. எனக்கு வேறு அது ஒரு உருவகமாகத்தெரிந்தது.

'உருவகம்’ அது அடிக்கடி நான் நினைத்தப் பார்ப்பது உண்டு. நான் அதிகமாகப் படிக்கா விட்டாலும் ஒய்ந்த போது தமிழ் இலக்கியம் படிப்பேன். அதனால் இந்தச் சொற்கள் எனக்குப் பழக்கம். உங்களுக்குத் தெரியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/9&oldid=1320646" இலிருந்து மீள்விக்கப்பட்டது