பக்கம்:காணிக்கை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 அவள் உண்மையில் மருந்துதான் வைத்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவளைப் பற்றி ஏன் நினைக்க வேண்டும். நட்பு என்ருல் இவ்வளவு தூரத்துக்குப்போகக் கூடாது. அது வெறும் நட்பு என்று எப்படிக் கூறமுடியும் அதில் பெண்மையும் கலந்து இருக்கிறது. பெண்மைக்கே ஒரு தனிக் கவர்ச்சி இருக்கிறது. அது ஏதாவது வடிவம் கொள்கிறது. கொஞ்சம் ஏமாந்தால் ‘காதல் என்ற போதைக்குச் சென்று விடுகிறது, ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகும் பொழுது இந்த போதை உண்டாகத் தான் செய்கிறது. அவள் இல்லை என்ருள். நான் அப்படிச் சொல்ல முடியவில்லை. அவள் அந்தப் பார்வை இல்லாமல் பழகமுடியும் என்று நம்புகிருள்; அதை என் ல்ை முழுவதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனல் அவளிடம் பேசிப் பழகும் பொழுது நான் திருந்தி விடுகிறேன். என் "மனம் பண்பட்டு விடுகிறது. அப்பொழுது தான் அவள் உயர்வு எனக்குத் தெரிகிறது. பெண் மட்டும் உறுதியாக இருந்தால் எந்த ஆண் மகனும் கெட முடியாது என்பதை அவள் தொடர்பால் அறிந்து கொண்டே ன் மூன்று நாள் ஒரே கூரையில் பழகினேன்; அவள் நன்மை என்னைக் கவர்ந் தது. ஆனல் அவள் பெண்மை என்னைக் கெடுக்க வில்லை. இது ஒர் அழகிய அனுபவமாக இருந்தது. பெண் சில சமயம் தெய்வம் ஆகிருள்; அவளே சில சமயம் பேயுமாகக் கர்ட்சி அளிக்கிருள். அவள் எனக்குத் தெய்வமாகக் காட்சி அளிக்க வில்லை:பேயாகவும் தோன்ற வில்லை. மானுடப் பெண்ணுகவே காட்சி அளித்தாள். காதல் பார்வையில் அவள் தெய்வமாகிருள்; வெறுப்புப் பார்வையில் அவள் பேயாகிருள்: நட்புப் பார்வையில் அவள் ஒரு பெண் ணுகவே விளங்குகிருள். அவள் தன்னைப் பாராட்ட இடம் கொடுக்கவே இல்லை. அவள் அன்பை மட்டும் ரசிக்க இடம் தந்தாள். "உண்மையில் உன்னைப் பாராட்டுகிறேன்' என்று கூறினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/94&oldid=787249" இலிருந்து மீள்விக்கப்பட்டது