பக்கம்:காதலா கடமையா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாட்டையே பாடினான். கிள்ளையோ, பஞ்சணைமீது படுத்துப் புரண்டு,

“நாட்டுக் குரிமை நன்றா? என்னுயிர்
வாட்டும் காதற்கு வகைசெயல் நன்றா?”

என்றெண்ணிக்கிடந்தாள். தன் கருத்தை வினவிய தாரோனிடம், 'மன்னனை மணப்பதினும் மாய்வதேமேல்' என்று அவளும் பழைய பாட்டையே பாடினாள்.

அன்றிரவு பூங்காவில் புலம்பி உலாவிய மகிணனை அமைச்சன் அடைந்தான். தங்கவேல் அனுப்பியதாக ஒரு கடிதத்தைத் தந்தான். அதில், 'மகிணரே! மன்னனின் மனத்தை மாற்றி மக்கட்கு விடுதலை வாங்கும் வழி உங்கையால் கிள்ளையின் உயிரைப் போக்குவதே. யானும் என் வாழ்வை முடித்தவனாவேன்' என்று எழுதப்பட்டிருந்தது. படித்த மகிணன் அமைச்சனிடம் வாளொன்று பெற்றுக் கிள்ளையை. நோக்கி நடந்தான்.

மன்னனோ, நாமே சென்று வணங்கிக் கெஞ்சினால் கிள்ளை வயப்படுவாள் என்றெண்ணி, அமைச்சனைப்போல் உருக்கொண்டு விடுதலைப்பட்டயத்துடன் அவள் துயிலிடம் அடைந்தான்.

மகிணனுக்கோ மங்கையைக் கொல்ல மனம் வரவில்லை. ஆயினும் கடமையை முடிக்கக் கைதூக்கினான். கையில் வலுவில்லை. வாள் பொத்தென்று விழுந்தது கீழே. கிள்ளை விழித்துத் திடுக்கிட்டாள். மகிணன் வந்த வரலாற்றை உணர்த்தி, மீண்டும் வெட்டுவதற்குத் தலை குனியச் செய்தான்; மீண்டும் வாள் கீழேயே விழுந்தது. கிள்ளையோ, தானே வாளை வாங்கி வெட்டிக்கொள்ளத் தொடங்கினாள். மறுத்தான் மகிணன். மறித்து மீண்டும் தொடங்கினாள். அப்போது மறைந்து நின்ற மன்னன் கிள்ளையைத் தடுத்தான். காதலர் இருவரின் கடமையை வியந்து புகழ்ந்தான். விடுதலைப்

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/14&oldid=1484370" இலிருந்து மீள்விக்கப்பட்டது