உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காதலா கடமையா.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலா? கடமையா?

"இம்மா நிலத்தில் எனக்கொன்று வேண்டும். அதுவோ, எனக்கோர் ஆவி யாகும். புதியதாய் ஓவியர் புனைந்த பாவையே உனக்கொன்று தேவை. உனக்கும் அஃதுயிர். இனிப்புக் கினிப்பென எழுந்த செங்கரும்பே, உன்றன் தேவை என்றன் கையிலும் என்றன் தேவை உன் கையிலுமாம்

எனவே, உன்னுயிர் என்னிடம் என்னுயிர் உன்னிடம் மன்னி இருப்பது மறைப்பதற் கில்லை" என்று மன்னன் இயம்பிய அளவில்,

"நாட்டுரிமை மக்கட்கு நல்குவோர் தாம்ஒன்று கேட்டு நிற்பது கேட்டதில்லையே,' என்றாள் கிள்ளை.

வையமன்னனும் மணி முடிதாழ்த்தி "ஐயம் என்றுவாய் அங்காந்து கேட்பதோர் உயர்பொருள் உன்னிடம் உள்ளதே" என்றான்.

'அயல் ஒருவர்க்கதை அளித்தேன்" என்றாள்.

வருந்திய மன்னன் "குருந்துபடர் முல்லை 

பெருந்தேக்கிற் சென்று பொருந்துதல் இல்லையோ? என்றான்.

"காதல் என்னுமோர் கைதேர்ந்த தச்சன் வாழ்தலில் சிறப்பொன்று மாட்டக் கருதி என்னுடல் மற்றுமோர் பொன்னுயிர் இரண்டையும் முன்னரே பொருத்தி முடித்தான்" என்றாள்!

"முடிவை மாற்ற முடிந்தால் உனக்கும்

குடிகள் தமக்கும் கொற்றவன் எனக்கும்

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/53&oldid=1483665" இலிருந்து மீள்விக்கப்பட்டது