பக்கம்:காதலா கடமையா.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆம் அவ ளுயிரே அகற்றத்தக்கது!
தீமை போகும் திருநாடு வாழும்.
கொடியான் தானும் கொடுமை ஏற்று,
விடுவான் நாட்டை, வேறுவழி ஏது?
அமைச்சரே ஒரு 'வாள்' அளிக்கவேண்டும்.
இமைக்குமுன் அவளுயிர் ஏகு மாறு
செய்வேன். கடன்இது. செய்வேன், தக்கது.
தையல் உயிரால் தருக விடுதலை,
அணங்கினள் ஆவி, அனைவர்க்கும் மீட்சியைக்
கொணர்ந்த தென்னில் கொண்டாடத் தக்கது.
காதல் பெரிதன்று! கடமை பெரிது!
ஈதல் உண்டோ எழில்வாள்" என்றான்
அமைச்சன் வாள்ஒன் றளித்தான்
தமிழன் கொண்டு போனான், தையலை நோக்கியே.

 

98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/99&oldid=1484468" இலிருந்து மீள்விக்கப்பட்டது