பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்த்து ☆

கான் சாயபு கதை தன்னைப் படிக்க செய்த
கர்ம வினைகள் காதவழி யோட
மாத மும்மாரி மழை பொழிய இந்த
மண்டலத்தின் மன்னவர்கள் செங்கோல் தழைக்க
நேசமுடன் கான் சாயபு கதையை இந்த
நீனிலந் தன்னிலே நித்தம் படிப்போர்
தேசம் திலதிக நாளிருந்து
சீமானெனப் பெருகிச் செல்வந் தழைக்க
பாண்டியன் மகள் மீனாளைப் போல அதிக
பாக்கிய மென்மேலும் பெருகி யுண்டாக
திருப்பதி மலை ரங்கர் வாழி நல்ல
சீதா பிராட்டியுடன் உமையவளும் வாழி
தென் மதுரைச் சொக்கையர் வாழி எங்கள்
தேன்மீனாள் கயற் கண்ணியும் வாழி
மயிலேறு வேல் முருகா வாழி குற

வள்ளிதெய் வானையுடன் மலர்மகளும் வாழி

* வாழ்த்துப் பாடலில் எல்லாத் தெய்வங்களையும் கூறல் நாட்டுப் பாடல் மரபாகும். நாட்டுப் பாடலை கேட்போரில் பல தெய்வங்களையும் வணங்குபவர்கள் இருப்பார்கள். அவர்களுடைய ஆதரவு பெற அவரவர்கள் தெய்வத்தைப் பாடகர் வாழ்த்துவார்