பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

X

அளித்துவிடச் சம்மதித்து அவனது உதவி கூட்டணிக்கு கிடைக்கும்படிச் செய்தான். அவன் திட்டங்கள் நிறைவேறு முன்பே, பிரெஞ்சுக்காரர்களோடு, ஆங்கிலேயர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகக் கம்பெனியார் கான்சாகிபுவை அழைத்தார்கள். அவன் சென்னைக்குச் சென்றுவிட்டான்.

பூலுத்தேவன் கான்சாகிபு இல்லாத வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தனது தலைமையிலிருந்த அணியின் பலவீனங்களைப் போக்கி, பிரிட்டிஷ் நவாப் எதிர்ப்பணியை வலுப்படுத்த முயன்றான். கட்டபொம்மு நாயக்கன் இறந்து போனான். அவன் பூலுத்தேவனுக்கு எதிரியாகயிருந்தான். அவனுடைய மகன் பட்டம் பெரும்பொழுது தனது பிரிட்டிஷ் எதிர்ப்பை வெளியிட்டான். அவனுடைய மகனோடு பூலுத்தேவன் தொடர்பு கொண்டு அவனைத் தன் அணியில் சேர்த்துக் கொண்டான். மேற்குப் பகுதிப் பாளையங்களும், கிழக்குப்பகுதிப் பாளையங்களும், நவாப் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்க்க ஒன்று சேர்ந்தன. எட்டயபுரமும் கூட்டணியில் சேர்ந்தது. நெல்லைச் சீமையில் முதன் முதலாக மறவர் பாளையங்களும், நாயக்கப் பாளையங்களும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒழிக்க ஒன்றுபட்டன.

மறுபடி யூசுப்கான் 1759ல் திருநெல்வேலிக்கு வந்தபொழுது பிரிட்டிஷ் எதிர்ப்பு அணி பலமாக இருந்ததைக் கண்டான். திருவாங்கூர் அரசர் பூலுத்தேவனுடன் சேர்ந்திருந்தார். முன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தி கான்சாகிபு அவரை அணியிலிருந்து விலகச் செய்தான். அணியைச் சேர்ந்த பாளையங்களின் மீது திடீர் தாக்குதல்களை எதிர்பாராத நேரங்களில் தொடுத்தான். பூலுத்தேவனின் கோட்டைகளில் ஒன்றான கொல்லங்கொண்டானை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். கிழக்கே திரும்பி, கோல்வார்பட்டியைப் பிடித்தான். மறுபடி மேற்கே, திரும்பி சுரண்டையைக் கைப்பற்றினான். திருவாங்கூர் நாயர்படைகள் களக்காட்டுப் பகுதியைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தன. அவர்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, பூலுத்தேவனது பாளையத்திற்கு அவற்றைத் திருப்பிவிட்டான். பின்னர் வடகரைக்குப் படை கொண்டு சென்று கோட்டையைப் பிடித்தான். வடகரைப் பாளையக்காரர் வாசுதேவநல்லூருக்கு ஓடிப்போனார். பூலுத்தேவன் பாளையங்களில் அது ஒரு பலமான கோட்டை. எதிர்ப்பு அணியின் தலைமை அலுவலகம் அதுதான். இக்கோட்டையைப் பிடிக்க பிரிட்டிஷ் தளபதிகள் பலதடவை முயன்றனர். முடியவில்லை. இப்பொழுது யூசுப்கான் அக்கோட்டையை முற்றுகையிட்டான். நெல்கட்டாஞ்செவலில் இருந்து திடீரென்று பூலுத்தேவன் தோன்றி யூசுப்கான் படையை பின்பக்கமிருந்து தாக்கினான். அதனைச் சமாளித்துச் சில நாட்கள்